யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கான பொது அறிவித்தல்
வீடமைப்பு அமைச்சின் நிதியின் கீழ் வீடுகளைத் திருத்தியமைப்பதற்காக குடும்பமொன்றுக்கு 100,000.00 ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உதவித்திட்டம் தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பதிவுகளைக் (அ காட்களைக்) கொண்டிருக்கின்ற அனைவரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். எனினும் போதியளவு விண்ணப்பங்கள் தம்மை வந்துசேரவில்லை என யாழ்ப்பாணம் பிரதேச செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வீடுகளைப் புனரமைப்பதற்கு கிடைத்திருக்கின்ற இவ்வரிய சந்தர்ப்பத்தினை தவற விடாது பயன்படுத்துவது சிறப்பானது.
எனவே தங்களது வீடுகள் அமைந்திருக்கின்ற கிராம அலுவலகர் ஊடாக விண்ணப்பங்களை வழங்கி குறித்த திட்டத்தின் கீழ் பயன் பெறுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவிக்கின்றார்.
மேலதிக தகவல்களையும் விபரங்களையும் தம்மிடமோ அல்லது குறித்த கிராம அலுவலகரிடமோ பெற்றுக்கொள்ளமுடியும் என பொது மக்களுக்கு அறியத்தருதாகவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment