நல்லாட்சியில் முதலாவது பள்ளி உடைப்பு! றிசாத் ,ஆஸாத் ஸ்தலத்துக்கு விரைவு

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மஸ்ஜித் ஒன்றின் மீது முதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது , கொழும்பு பொரலையில் மைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது இன்று 30 இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சிறிய ரக வாகனம் ஒன்றில் வந்த நால்வர் குறித்த தாக்குதல்களை மேட்கொண்டுள்ளனர், இந்த தாக்குதல் காரணமாக மஸ்ஜிதின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.
புதிய  அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மஸ்ஜித் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் தாக்குதலாக இது அமைத்துள்ளது ,கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பல மஸ்ஜிதுக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியது ஆனால் போதுமான ஆதாரங்கள் இருந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை , இப்போது மஸ்ஜித் ஒன்றின் மீது முதல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இப்போது இருக்கும் கேள்வி தாக்குதல்களுடன் தொடர்பு பட்டகுற்றவாளிகள் கைது செய்யபடுவார்களா ? அதற்காக பொலிசார் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுப்பார்களா  ? கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா ?, சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் மேற்படி தாக்குதல்களுக்கு புதிய அரசாங்கத்தில் துரித நடவடிக்கைகள் மூலமாக முடிவு கட்டப்படுமா ? என்பதுதான் ,  இதற்கான விடையை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், பள்ளிவாசலின் நிலைமைகளை பார்வையிட அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் அப்பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது