அம்பாறை மாவட்டம் ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் அம்மன் முன்பள்ளியும், அகத்திக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள லோட்டஸ் முன்பள்ளியும் இணைந்து 2013/2014 காலப்பகுதியில் முன்பள்ளிக் கல்வியை பூர்த்தி செய்து அடுத்த வருடம் தரம் - 01க்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளைகளுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள், வழங்கி கௌரவித்து வழியனுப்பும் விடுகை விழா நிகழ்வு கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அமைப்பின் நிதி அனுசரணையில் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் 28.11.2014ம் திகதி அம்மன் இல்லக் கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அம்மைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் திரு அலன் போல் அவர்களும் அவரது குழுவினரும், திருக்கோவில் வலயக் கல்வி முன்பள்ளி இணைப்பாளர் திரு. எஸ். தர்மபாலன், முன்பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.உஜேந்தன், சொலிடாரி பவுண்டேசன் அமைப்பின் திட்ட பணிப்ப்பளரும், கெல்ப் ஈஸ்ட் லங்கா புறக்கிரஸ் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பளருமான வே. வாமதேவன், திட்ட ஆலோசகரான திரு. மு. மொனாஸ், அம்மன் இல்ல முகாமையாளர் திருமதி தி.கோகிலா, அம்மன் முன்ப...