சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!
(யு.எம்.இஸ்ஹாக் )
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு நேற்று சனிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
பைதுஸ் ஸக்காத் நிதியத் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹாலிஅல மாபாஹிருள் உலூம் அரபுக் கலாசாலையின் அதிபர் மௌலவி ஹசன் பரீட் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, செயலாளர் அப்துல் மஜீத், பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் பணிப்பாளர் எம்.எம்.இப்ராஹிம், செயலாளர் யூ.எல்.எம்.ஜவ்பர், உப தலைவர் எம்.மஹ்ரூப், பொருளாளர் எம்.எம்.நபாயிஸ், உப பொருளாளர் ஏ.சி.ஜமால்தீன் உட்பட மரைக்காயர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment