முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சுப்பதவி

முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்குபிரதியமைச்சுப்பதவி வழங்கப்பட்டதாக பரவி வரும்செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண பிரதித்தவிசாளா்எம்.எஸ்சுபைா் அவா்களிடம் தொலைபேசி மூலமாகவினவிய போது அவா் இவ்வாறு தெரிவித்தார். 2012ஆம்ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில்முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிஅவர்களை போட்டியிடச் செய்து முதலமைச்சர் பதவிவழங்குவதாக அரச தரப்பு உறுதியாகக் கூறியிருந்தது.ஆனால்அரசு எதிர்பார்த்த பெரும்பான்மைஆசனங்களைப்பெற முடியாமற் போனதுஇதனால்முஸ்லிம் காங்கிரசினையும் இனணத்து ஆட்சியமைக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.

இதனால்அமீர் அலியின் முதலமைச்சர் பயணம்தடைப்பட்டதுஅதனையடுத்துகிழக்கு மாகாணத்தில்ஒரு பொம்மை முதலமைச்சரை அரசாங்கம் நியமித்தது.இதன் மூலம் மாகாணத்தின் முஸ்லிம்களதுஅபிலாஷைகளையும் அவர்களது நியாயமானகோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கமுடியாமல் மாகாண முஸ்லிம்களுக்கு பாரியஅநீதியிழக்கப்பட்டதுஇதனையடுத்துகல்குடாமுஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் குழப்ப நிலைதீவிரமடைந்தது

இதனையடுத்து கல்குடாவுக்கு வருகை தந்தபொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசீல் ராஜபக்ஷ,முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு பிரதியமைச்சுபதவியொன்றினை வழங்குவதாக 2012 ஓக்டோபர்16ஆம் திகதி ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலில் வைத்து கல்குடா முஸ்லிம் மக்கள்முன்னிலையில் வாக்குறுதி வழங்கினார்இதனைஅன்று நிறைவேற்றத் தவறிய அரசு இந்தஜனாதிபதித்தேர்தலில் அவ்வாக்குறுதியைநிறைவேற்ற அரச தரப்பு முனைகின்றதுகல்குடாமக்களின் அனுமதியில்லாமல் எந்தப்பதவியினையும்முன்னாள் அமைச்சர் அமீா் அலிபெறத்தயாரில்லையென கிழக்கு மாகாண சபைப்பிரதித்தவிசாளர் எம்.எஸ்சுபையிர் இன்றுஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது