ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் இரண்டு வருட செயற்திட்டத்தின் நிறைவுநிகழ்வு

(சுரேஸ்)

செயற்திட்டங்களின் மூலம் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு எதிர்காலத்தில் ஓர் தொழிற்சாலை அமைத்துக்கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம் என ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கிழக்குமாகாணத்திற்குப் பொறுப்பான முகாமையாளர் ஈ.தர்சன் கருத்துத் தெரிவித்தார்.

ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் வவுணதீவு இலுப்படிச்சேனை பிரதேசத்தின் இரண்டுவருட செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி கருத்துத்தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்......
எமது செயற்திட்டமானது வவுணதீவு பிரதேச செயலாக பிரிவில் இலுப்படிச்சேனை, வாழைக்காலை, சின்னகாலபட்டமடு, நாவற்தோட்டம் ஆகிய கிராமங்களில் 350ற்கு மேற்பட்ட குடுப்பங்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி, வாழ்வாதார முயற்சியிலான பயிற்சிகள் வழங்கல், சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற செயற்திட்டத்தின் உள்வாங்கப்பட்டு தலைமைத்துவம், தொழில் அபிவிருத்திபயிற்சிகள் பெண்கள் சமத்துவம் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது அதிலும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பனையோலையிலான கைப்பணிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி என்பன கொடுக்கப்பட்டு திட்டம் செயற்படுத்தும் கிராமமட்டத்தில் 27 பேர்கள் கொண்ட சமூக ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்கள்தான் செயற்திட்டதின் நிறைவின் பின்னர் கிராமமட்டத்தில் அபிவிருத்திற்காகவும் தொழில்ஊக்குவிப்புக்கானவும் செயற்படவுள்ளனர்.

இச் செயற்திட்டத்தின் மூலமாக கிராமங்களில் உள்ள 1348 பேர்களில் ஏதாவது ஒருவிதத்திலேனும் பயனடைந்துள்ளனர் அத்துடன் எமது இரண்டு வருட கால திட்டம் நிறைவடைந்துள்ள சந்தர்பத்தில் இனி வரும்காலங்களில் இக்கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம் எனவும் கருத்துத்தெரிவித்தார். 

இன்று 2014.11.28 இலுப்படிச்சேனை பல் தேவை கட்டடத்தின் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் செயற்திட்ட நிறைவு நாள் நிகழ்வின் அமைப்பின் திட்டஇணைப்பாளர் வீ.ரோகினி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் திட்ட இணைப்பாளர்பாளர் கே.சுதாகரன், இலுப்படிச்சேனை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அரசகுமார்,சமூர்த்தி உத்தியோகத்தர் கே.சிவசம்பு, பொருளாதார உத்தியோகத்தர் எஸ்.இளங்கோ மற்றும் திட்டம் நடை முறைப்படுத்திய கிராமங்களின் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வின் அதிதிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் நினைவு சின்னங்கள் கையளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது