சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதியில் இரண்டு வீடுகள் மின் ஒழுக்கு காரணமாக தீப் பற்றி எரிகின்றது

சாய்ந்தமருது ஜமாஹிரியா வீதியில் இரண்டு வீடுகள் மின் ஒழுக்கு காரணமாக தீப் பற்றி எரிகின்றது ..........(தகவல் ,படங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும்)
 பிந்திய தகவல் 

 சாய்ந்தமருது இரண்டாம் பிரிவு ஜமாஹிரியா வீதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (27) சற்றுமுன் இரவு 8.15 மணியளவில் மின் கசிவினால்  எம். லாபீர் என்பவரது வீடு முற்றாக சேதமாகியுள்ளது.

இத்தீயினை அணைக்க அயலவர்கள் முயற்சித்த போதும் பயனளிக்காமல் இத்தீ பரவி வீடு முற்றாக சேதமடைந்துள்ளது,

சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார், கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, பொதுமக்கள் ஆகியோரின் முயற்சியினால் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும், வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. 

திடீர் என தீ பரவியதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பியுள்ளனர் . 

இத்தீ விபத்து  தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்