5ம் தர புலமைப் பரிசில் வெற்றி பெற்ற மருதமுனைப் பிரதேச மாணவர்கள் 76 பேர் கௌரவிப்பு!
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மருதமுனைக் கிளையின் தலைவர் எம்.ஐ.முகம்மட் பிராஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்; கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் றாஸிக் கலந்து கொண்டார்.
மேலும் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்சக்காப் ஆகியோரும், அதிதிகளாக அதிபர்களான எம்.எம்.ஹிர்பகான், எம்.ஏ.எம்.இனாமுல்லா, ஏ.ஆர்.நிஃமத்துல்லா, ஏ.முகம்மட் ஜிப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment