Posts

Dialog eZ Cash மூலம் பண மோசடி கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ஏமாற்றப் பட்டார்

Image
கல்முனை பிரதேசத்தில் Dialog eZ Cash மூலம் பண மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பலினால் கல்முனை பிரதேச செயலக கணக்காளர் ஏமாற்றப் பட்டு 30 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ளதாக கல்முனை பொலீசில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . குறித்த கணக்காளருக்கு இன்று (29) டயலொக் தொலை பேசி இலக்கமொன்றிலிருந்து அழைப்பு கிடைக்கப் பெற்றதாகவும் தனக்கு 15 இலட்சம் ரூபா பணப் பரிசு கிடைக்கவிருப்பதாகவும் இப்பணத்தைப் பெறுவதற்கு உடனடியாக காப்புறுதிப் பணமாக 30ஆயிரம் ரூபா வைப்பீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை நம்பிய கணக்காளர் 30ஆயிரம் ரூபா பணத்தையும் Dialog eZ Cash நிலையம் ஒன்றில் செலுத்தியுள்ளார் . பரிசுப் பணத்தைப் பெறுவதற்கு தனக்கு வந்த அழைப்பு தொலை பேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்திய போது அது தவறான இலக்கம் என அறிவிக்கப் பட்டதாக கணக்காளர் போலீஸில் செய்யப் பட்டுள்ள முறைப் பாட்டில் தெரிவித்துள்ளார் . Dialog eZ Cash மூலம் பண மோசடி இடம் பெறுவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மக்களை தெளிவு படுத்தும் வகையில் கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் ,மத வழிபாட்டுத்தல

வில்பத்து விவகாரம் சாய்ந்தமருதில் ஆர்பாட்டம்

Image
முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளைக் கண்டித்தும் வடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் காணப்பட்டுவரும் பாராபட்சங்ககை கண்டித்தும் வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லீம்களின் காணிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் சதி முயற்சிகளைக் கண்டித்தும் சாய்ந்தமருதில்  பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று (29) ஜூம்மாத் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி இணைப்பாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  பொது மக்கள் கலந்து கொண்டனர்   

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு இடைஞ்சல் விளைவித்த நபருக்கு கல்முனை நீதிவான் நீதி மன்றில் அதி உச்ச தண்டனை

Image
கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீவிர கண்காணிப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், கடந்த 2014-03-27ம் திகதி சாய்ந்தமருது  பிரதேசத்தில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அவர்களது கடமையை செய்வதற்கு இடைஞ்சல்  விளைவித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கல்முனை பொலிசார்  கல்முனை நீதிவான் நீதி மன்றில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். குறித்த நபர்மீதான விசாரணை கல்முனை நீதிவான்  நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சன் முன்னிலையில் விசாரிக்கப் பட்ட போது  குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று கல்முனை நீதிமன்ற நீதிபதி ஏ.ஜுட்சனினால்   குறித்த குற்றவாளிக்கு 1500ரூபாய் தண்டம் விதித்ததுடன் 5 வருட ஒத்திவைக்கப்பட்ட, 1வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தத்துடன் சூழலுக்கு  பாதிப்பு ஏற்படுத்திய  குற்றத்துக்காக மேலும் 2000 ரூபா தண்டம் விதித்தார் .

மியன்மார் பிக்குகளின் இரகசிய நிலையம் இலங்கையில்

Image
றஸ்மி மூஸா சலபி  கொழும்பு ஏழு பௌத்தலோக மாவத்தையில் தும்மூல சந்தியில் பௌத்தர்களின்  பெரிய புத்த கலாசார நிலையம் ஒன்று உள்ளது.  2600 ஆம் ஆண்டை குறிக்கும் சம்புத்த ஜெயந்திய என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வை முன்னிட்டு பல மாடிகள் கொண்ட  இப்பெரிய  கட்டிடம் 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இதனை திறந்து வைத்தார்.  இந்த நிலையத்தின் உண்மைத் தன்மை பற்றி  கடந்த வருடம் எனது புலனாய்வுக்கு எட்டிய தகவல்களை ஒரு பத்திரிகையாளரிடம் எடுத்து சொன்னேன். ஆனால் அவ்வேளை அது அவருக்கு ஒரு பாரதூரமாக விளங்கவில்லை. பின்னர்தான் அவர் நான் சொன்னதன் உண்மைத் தன்மையை எனக்கு சுட்டிக் காட்டினார். அதாவது அந்தக் கட்டிடம் ஒரு இராணுவ தளபதியால் நிர்வகிக்கப்படுகின்றது. அதில் வேலை செய்யும் பெரும்பான்மையானவர்கள் இராணுவ வீரர்கள். இதன் தலைமை நிர்வாகி கோதபாய ராஜபக்ச.   அங்கு நடைபெற்ற  அரச  நிகழ்ச்சிகளில் சிலதில் எனக்கும்  கலந்துகொள்ளக் கிடைத்தது. அவ்வேளை நான் அங்கு அவதானித்த விடயம், அங்கு பல பிக்குகள் வருவார்கள், கலந்துரையாடல்களில் பங்கு பற்றுவர்.  அங்கு வருபவர்களில் அதிகமானவர்கள் பர்மாவ

மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களைஉள்ளடக்கிய “ கரைவாகு வடக்கு நகரசபை” கோருதல் தொடர்பான கலந்துரையாடல்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களை உள்ளடக்கிய “கரைவாகுவடக்குநகரசபை” கோருதல் தொடர்பாக ஆராய்ந்த கலந்துரையாடல் இன்று  இரவு மருதமுனை பொது நூலகமண்டபத்தில் நடைபெற்றது.  மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை ,தக்வா இயக்கங்கள் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மருதமுனைக்கான உள்ளுராட்சி அலகொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான செயலணியின் தலைவர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாஹீம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தசெயலணியின் செயலாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்குவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக்  கலந்துரையாடலில் செயலணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஐ.எம்.வலீத் அமையப் போகும் உள்ளுராட்சி மன்றம் சம்பந்தமாக விளக்கமளித்ததுடன் மன்றத்தின் வரவு  செலவு  அறிக்கையையும் சமர்ப்பணம் செய்தார். அமையப்போகும் உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக செயலணியின் தலைவர் ஓய்வூ பெற்றகல்விப் பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாஹீம்,அனைத்துப் பள்ளிவாசலகள் சம்மேளனத்தின் பதில் தலைவர் அஷ்சேய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், எ

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மாற்று கட்சிக்காரர்கள் பலர் இணைவு - முன்னாள் முதல்வர் சிராஸ் அதிரடி ஆரம்பம்

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை அம்பாறை மாவட்டத்தில் மேலும் வலுவுட்டும் வகையிலும் கட்சியின் செயற்பாடுகளை கிராமங்கள் தோறும் விரிவுபடுத்தும் வகையிலும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத்  தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது சம்பந்தமாகவும் ஆதரவாளர்களுடனும் ஊர் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வொன்று இன்றிரவு சாய்ந்தமருதில் உள்ள கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி இணைப்பாளருமான கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது , கல்முனைக்குடி , மருதமுனை , மாளிகைக்காடு , சம்மாந்துறை , வரிப்பத்தாஞ்சேனை , இறக்காமம் , ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து  அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் மருதூர் அன்சாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம

கொலை சூத்திரதாரியை கண்டுபிடிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: கூட்டமைப்பு எச்சரிக்கை

Image
மண்டூரில் மதிதயன் என்ற அரச உத்தியோகத்தரை நவீனரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை ஒரு வாரகாலத்திற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கிழக்கில் போராட்டங்களை நடாத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பில் அமைந்துள்ள  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது குறித்து மேலும் கூறுகையில், மண்டூரில் பட்டப்பகலில் அதிநவீன மைக்ரோரக கைத்துப்பாக்கியை பாவித்து அரச உத்தியோகத்தரான மதிதயன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரின் கொலையானது கிழக்கு மாகாணத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது எனவே சூத்திரதாரிகளை ஒரு வாரகாலத்திற்குள் பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடிக்கவேண்டும். ஒரு வாரகாலத்திற்குள் கொலையாளிகளை கண்டுபிடித்து கொலைக்கான காரணங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் கிழக்கில் உள்ள மக்களுடன் இணைந்து போராட்டங்களை நடாத்துவதற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம். இன்றைய தினம் போராட்டம் நடாத்துவதற்கு நாங்கள்

கிழக்கு மாகாண ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தில் நியமிக்க நடவடிக்கை

Image
வெளிமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை மீண்டும்  சொந்த மாவட்டப் பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதால் விரும்பியவர்கள் விபரங்களை அனுப்புமாறு கிழக்கு மாகாண  முதலமைச்சின் செயலகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் கற்பிக்கும் ஏராளமான ஆசிரியர்கள் தங்களின் பயணம் மற்றும் குடும்பக் கஷ்டங்களைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதிடம் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து மேற்குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   எனவே கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் கடமையாற்றும் மற்றும் தங்களையும் தங்கள் மாகாணத்திலேயே நியமியுங்கள் என்று கூறும் அனைவரும் தங்களது பெயர்- முகவரி- தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தற்பொழுது கற்பிக்கும் பாடசாலை போன்ற விபரங்களை   east.complaine@gmail.com   என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 

துவான் புனைட் இன்று காலமானார்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அனுதாபம்

Image
மருதமுனை துவான் புனைட்  இன்று காலமானார்  மருதமுனையில் கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைப் பேச வைத்த பெருந்தகையாக அன்னார் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார். அன்னாரின் இறப்பினை கேள்வியுற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது   மாரடைப்பால் மரணித்துள்ள அன்னாரின் ஆத்ம சாந்திக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரார்த்திப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ராஜேஸ்வரன் அனுதாபம்  தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் படுகொலையை கண்டித்து கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Image
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்முனை மாநகர சபையில், கண்டனம் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாலை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த கண்டனப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  இப்பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், 'நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள சூழ்நிலையில் வடக்கில் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு சில தீயசக்திகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கூட அதன் பின்னணியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுகின்றது' என்றார். அத்துடன், 'தனித்துவமான கலாசாரம் ஒன்றைக் கொண்டுள்ள தமிழ் சமூகத்துக்குள் இவ்வாறான கொடூரம் ஒன்று இடம்பெற்றுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்ச

அடுத்த தேர்தலில் போட்டியிட தமிழ்- முஸ்லிம் உறவில் விரிசலுக்கு ஆயத்தம்! கல்முனை மாநகர சபை உறுப்பினர் கமலதாசன் !!

Image
கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை கல்முனை மாநகர சபை முற்றாக புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி அந்த சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்  வீ.கமலதாசன், பொது நிர்வாக, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிய கடிதத்தினால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றபோதே இக்கடித விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சபைக்கு தலைமை வகித்த மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், ஆங்கில மொழியில் அனுப்பப்பட்டிருந்த குறித்த கடிதத்தை சபையில் வாசித்துக் காட்டியதுடன் அது குறித்த தமது மறுப்பை புள்ளி விபரங்களுடன் தெளிவுபடுத்தினார். கல்முனை தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் முற்றாக  புறக்கணிக்கப்படுவதாகவும் தொழில் வாய்ப்பு விடயத்தில் சுகாதாரத் தொழிலாளர் நியமனத்தை தவிர வேறு எந்த தொழில் வாய்ப்பும் தமிழருக்கு வழங்கப்படவில்லை எனவும் உறுப்பினர் கமலதாசன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தான் முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த முதல்வர் அதற்கான ஆதாரங்களை சபையில் சமர்ப்பித்தார். உள்ளூராட்சி அமைச்சர

புளுக்கனாவையில் கல்முனையில் இருந்து சென்ற பஸ் விபத்து 13 பேருக்கு காயம்

Image
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் புலுகுணாவ பகுதியில் குடைசாய்ந்ததில்  13 பேர் காயமடைந்துள்ளனர். வீதியின் குறுக்காக சென்ற மாடுகளுடன்  மோதியதை அடுத்தே அந்த பஸ்  விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

Image
  சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா  நோய் பிரிவு ஏற்பாடு செய்துள்ள  விழிப்புணர்வு ஊர்வலமும் அறிவுறுத்தல் கூட்டமும்  திங்கட் கிழமை (01)   பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில்  நடை பெறவுள்ளது . தொற்றாநோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் தலைமையில் இடம்பெறும்  விழிப்புணர்வு ஊர்வலம்  கல்முனை  ஹிஜ்ரா சந்தியில் இருந்து தரவை கோவில் சந்திவரை நகர் முழுவதுமாக  இடம்   பெறவுள்ளது. இந்த விழிப்பு ஊர்வலத்தில் கல்முனை கல்வி வலய பாடசாலை மாணவர்கள் ,பொலிஸார் , கல்முனை வடக்கு,தெற்கு ,நாவிதன்வெளி ,சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் . ஊர்வலத்தை தொடர்ந்து  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விழிப்புணர்வு கூட்டமும் இடம் பெறவுள்ளது.

அனர்த்த பாதுகாப்புக் கல்வி எழுத்துப் பரீட்சைப் போட்டியில் சித்தி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும்

Image
வலய மட்ட அனர்த்த பாதுகாப்புக்  கல்வி  எழுத்துப் பரீட்சைப் போட்டியில்  வலய மட்டத்தின் அடிப்படையில்  முதலாம்,இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கேடயமும் சான்றிதழும்  கல்முனை  கல்வி வலய அதிபர்களிடம் வழங்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  இடம் பெற்றது.  கல்முனை  கல்வி வலய GIZ  இணைப்பாளரும் , உதவிக் கல்விப் பணிப்பாளருமான  எ.எ .சத்தார் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  கேடயம்,சான்றிதழை வழங்கினார். நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம்,எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை.அரபாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பாண் நிறை குறைக்கு கல்முனை நீதிமன்றில் குறைவில்லாத தண்டம்

Image
கல்முனை , சாய்ந்தமருது, பிரதேசங்களில்  நிறை குறைவாக பாண் உற்பத்தி செய்தோர் அம்பாறை மாவட்ட அளவீட்டு அலகு உத்தியோஸ்தர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு கல்முனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நிறை குறைவான பாண் உற்பத்தி செய்த பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் , நிறை குறைவான பாண் உற்பத்தி செய்யப்பட்டால் அவ்வாறு உற்பத்தி செய்யும் பேக்கரி உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்றும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப் பிள்ளை  யூட்சன் எச்சரித்ததாக அம்பாறை மாவட்ட அளவீட்டு அலகுகள் சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரி வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதன்படி நேற்றுமுன்தினம் நிறை குறைவான பேக்கரி உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தவர்களிடமிருந்து சுமார் 45,000 ரூபா அபராதமாக பெற்றதாகவும்   அவர் தெரிவித்தார். 

கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம்

Image
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தில் சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார். அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான கொடுமையான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும், நீதிபதி இளஞ்செழியன் கடமையாற்றியிருந்தார்.  அதனையடுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார். திருகோணமலையில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய அவர், பின்னர் கல்முனைக்கு மாவட்ட நீதிபதியாக இடம் மாற்றம் பெற

புகைத்தல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள் தவிர்ப்பு தொடர்பாக விழிப்பூட்டும் கருத்தரங்கு

Image
(அப்துல் அஸீஸ்​ ) புகைத்தல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருட்கள்  பாவனை தவிர்ப்பு தொடர்பாக   திவிநெகும பயனாளிகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு கல்முனை-01ஆம் பிரிவில் இடம்பெற்றது. திவிநெகும  தினைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் வருடம் தோறும் நடைமுறைப்படுத்தி வரும் புகைத்தல் ஒழிப்பு  மற்றும் போதைப்பொருட்கள்  பாவனை தவிர்ப்பு  நடவடிக்கை மற்றும் கொடி தினம் தொடர்பில் மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக் கூட்டம் இடம்பெற்றது.  திவிநெகு  அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சபாயாவின் ஒருங்கினைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக  கல்முனை  திவிநெகும வலய வங்கி  முகாமையாளர் ச.சதீஸ்,  திவிநெகு சமுக அபிவிருத்தி  உத்தியோகத்தர் என்.எம்.நெளசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற முறையில் மோட்டார் சைக்கிள்கள்

Image
விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் அறிவிப்பு ஊடகவியலாளர்களுக்கு தீர்வை அற்ற (Duty free)  முறையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. தகவல் ஊடகத்துறை அமைச்சு நிதி அமைச்சு என்பன இணைந்து நேற்று இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.. ஊடகத்துறையமைச்சர் கயந்த கருணாதிலக்க நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இணைந்து நிதியமைச்சில் நேற்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டை தொடர்ந்தே இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் இருவரும் ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக இது குறித்து அறிவித்தனர். வெளிநாடுகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது மற்றும் தீர்வையற்ற அடிப்ப டையில் அறவிடப்படக்கூடிய ஆகக்குறைந்த கட்டணம் ஆகியன தொடர்பான விவரங்களை குறித்து வாகன கம்பனியுடன் ஆராய்வதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சு நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் ஒருமாத காலத்தில் ஊடகவியலாளர்கள் மேற்படி மோட்டார் சைக்கிள்களுக்காக விண்ணப் பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படு மெனவும் அமைச்சர்கள் வாக்குறுதியளித்தனர். இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்காக தியகமவில் அமை