அனர்த்த பாதுகாப்புக் கல்வி எழுத்துப் பரீட்சைப் போட்டியில் சித்தி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும்

வலய மட்ட அனர்த்த பாதுகாப்புக்  கல்வி  எழுத்துப் பரீட்சைப் போட்டியில்  வலய மட்டத்தின் அடிப்படையில்  முதலாம்,இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான கேடயமும் சான்றிதழும்  கல்முனை  கல்வி வலய அதிபர்களிடம் வழங்கும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்  இடம் பெற்றது. 

கல்முனை  கல்வி வலய GIZ  இணைப்பாளரும் , உதவிக் கல்விப் பணிப்பாளருமான  எ.எ .சத்தார் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில்  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு  கேடயம்,சான்றிதழை வழங்கினார்.

நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம்,எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை.அரபாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்