மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களைஉள்ளடக்கிய “ கரைவாகு வடக்கு நகரசபை” கோருதல் தொடர்பான கலந்துரையாடல்.

(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசங்களை உள்ளடக்கிய “கரைவாகுவடக்குநகரசபை” கோருதல் தொடர்பாக ஆராய்ந்த கலந்துரையாடல் இன்று  இரவு மருதமுனை பொது நூலகமண்டபத்தில் நடைபெற்றது. 
மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை ,தக்வா இயக்கங்கள் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மருதமுனைக்கான உள்ளுராட்சி அலகொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான செயலணியின் தலைவர் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாஹீம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தசெயலணியின் செயலாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்குவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக்  கலந்துரையாடலில் செயலணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஐ.எம்.வலீத் அமையப் போகும் உள்ளுராட்சி மன்றம் சம்பந்தமாக விளக்கமளித்ததுடன் மன்றத்தின் வரவு  செலவு  அறிக்கையையும் சமர்ப்பணம் செய்தார்.
அமையப்போகும் உள்ளுராட்சி மன்றம் தொடர்பாக செயலணியின் தலைவர் ஓய்வூ பெற்றகல்விப் பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாஹீம்,அனைத்துப் பள்ளிவாசலகள் சம்மேளனத்தின் பதில் தலைவர் அஷ்சேய்க் எப்.எம்.அகமதுல் அன்சார் மௌலானா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், எம்.எஸ்.உமர் அலி, சட்டத்தரணிகளான எப்.எம்.அமிறுள் அன்சார் மௌலானா,எம்.ஐ.றைசுல் ஹாதி, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி,மஸ்ஜீதுன் நூர் ஜூம்ஆபள்ளிவாசல் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன் ஆகியோர்; அமையப்போகும் உள்ளுராட்சிமன்றம் தொடர்பாக உரையாற்றினார்கள்.
சபையோரின் ஏகமனதான அங்கீகாரத்துடன் “கரைவாகு வடக்கு நகரசபை”அமைப்பது பற்றிபிரகடனம் செய்யப்பட்டது. இச்சபையில் மருதமுனையின்  முக்கிய பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தனர். 








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்