பாண் நிறை குறைக்கு கல்முனை நீதிமன்றில் குறைவில்லாத தண்டம்
கல்முனை , சாய்ந்தமருது, பிரதேசங்களில் நிறை குறைவாக பாண் உற்பத்தி செய்தோர் அம்பாறை மாவட்ட அளவீட்டு அலகு உத்தியோஸ்தர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு கல்முனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது நிறை குறைவான பாண் உற்பத்தி செய்த பேக்கரி உரிமையாளர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் , நிறை குறைவான பாண் உற்பத்தி செய்யப்பட்டால் அவ்வாறு உற்பத்தி செய்யும் பேக்கரி உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்றும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப் பிள்ளை யூட்சன் எச்சரித்ததாக அம்பாறை மாவட்ட அளவீட்டு அலகுகள் சேவை நிலையத்தின் பொறுப்பதிகாரி வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதன்படி நேற்றுமுன்தினம் நிறை குறைவான பேக்கரி உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தவர்களிடமிருந்து சுமார் 45,000 ரூபா அபராதமாக பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment