முஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வலியுறுத்து பிறமத சகோதரர்களைப் படுகொலை செய்து ஈடேற்றம் பெறலாமென்ற கோட்பாடு இஸ்லாத்தில் இல்லையெனவும் வன்முறைகளிலீடுபடும் எந்த அமைப்புக்களும் இஸ்லாத்துக்கு உரிமை கோர முடியாதெனவும் முஸ்லிம் பெரியார்கள், உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்கள் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலையால் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று (22) கொழும்பு தபால் தலைமையகத்தில் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான், சூரா கௌன்ஸில் தலைவர் தாரிக் மஹ்மூத், ஜெம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்ததாவது, சாந்தி மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் வன்முறைகளை விரும்புவதில்லை. இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமுமில்லை. மதத்தின் பெயரால் தாக்குதல...