அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று
இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோது குறித்த தீர்மானத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
Comments
Post a Comment