வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்சதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.
இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும், 24 மணித்தியாலயங்களும் நடைமுறையில் உள்ள தொலைபேசி மத்திய நிலையம் ஒன்றை விசாரணை நடவடிக்கைகளுக்காக தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment