Posts

உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

Image
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார்.  வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  இதேவேளை இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.  இரண்டு கட்டங்களாக இந்த விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன், முதல் கட்டம் நாளை முதல் ஜனவரி 01ம் திகதி வரை இடம்பெற உள்ளது.  இடண்டாம் கட்டம் ஜனவரி 08ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடும்போக்கை கைவிட்டால் மஹிந்தவல்ல, எந்த மாப்பிள்ளைக்கும் மாலைகட்ட தயார்!!!

Image
சுகைப் எம்.காஸிம்   புயலடித்து ஓய்ந்த பின்னர் நிலவும் அமைதிக்கு, நாட்டின் அரசியல் திரும்பியுள்ளது.இந்தப்  புயலுக்குள் எத்தனை பட்சிகள் சிக்கின, எவ்வகைப் பறவைகள் மாய்ந்து வீழ்ந்தன, எந்த மிருகங்கள் இருப்பிடமிழந்தன. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான நேரமே இது. மேற் சொன்ன அஃறிணையை, உயர்திணையாக எடுத்துக் கொண்டு ஆராய்ச்சிக்குச் செல்வதே இக்கட்டுரையின் சுருக்கம்.தேசிய அரசியலில் ஏற்பட்ட இழுபறிக்குள் சிறுபான்மை அரசியற் கோட்பாடுகளே முதலாவதாக சிக்கிச் சிதறின. பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்களில், தேசிய கட்சிகளுடனுள்ள உறவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு சிறுபான்மைக் கட்சிகளும் செயற்பட்டமை பலரது அவதானத்தையும் ஈர்த்தது. சமூக அபிலாஷைகள் பாதிப்புற்றாலும் இக்கட் சிகளுடனுள்ள மரபு வழி உறவுகள் பாதிக்கப்ப டக் கூடாதென்பதிலே காய்கள் நகர்த்தப்பட்டன. இதிலிருந்த கவனம் சில தலைவர்களை ஐ.தே, கட்சியின் அடிமட்டத் தொண்டனாகத் தரமிறக் கியதையும் புயலுக்குள் துலங்கிய மின்னல்கள் காட்டின. மஹிந்த தரப்பு விசுவாசிகள் கடும் போக்கிற்குச் சார்பான சமூக உரிமைகளையும், ரணில் தரப்பு விசுவாசிகள் மிதவாதப் போ...

புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு - முழு விபரம்

Image
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டன.  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  அதன்படி புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு,  ஹர்ஷ டி சில்வா - பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சர்  இவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.  இராஜாங்க அமைச்சர்கள்   HMM.ஹரீஸ் - உள்ளூராட்சி மாகாண சபைகள் ராஜாங்க  அமைச்சர்    ரஞ்சன் ராமநாயக்க - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  ஜே. சி. அலவத்துவள - உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்  எரான் விக்ரமரத்ன - நிதி இராஜாங்க அமைச்சர்  அலி சாஹிர் மௌலானா - சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  ருவன் விஜேவர்தன - ப...

சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Image
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.  அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றம் கூடியது - இடைக்கால கணக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது

Image
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது.  புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  (பிந்திய  செய்தி  - 10.45 am)   புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  அத்துடன் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். (பிந்திய  செய்தி  - 11.00 am)   எரிபொருட்களின் விலைகளை குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவற்றின் விலை குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியது.

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

Image
பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் 40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கின்றன.   நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர இன்று இத்தகவலை தெரிவித்துள்ளார்.  அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

புதிய கூட்டணிக்கு தமது கட்சி ஆதரவளிக்காது

Image
ஐக்கிய தேசிய முன்னணியால் உருவாக்கப்படுகின்ற புதிய கூட்டமைப்புக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறினார்.  தமது கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக அல்ல என்று அவர் கூறியுள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - முழு விபரம்

Image
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான அமைச்சுப் பதவிகள் இன்று (20) காலை வழங்கப்பட்டன.  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  அதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க - தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  ஜோன் அமரதுங்க - சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர்  காமினி ஜயவிக்ரம பெரேரா - புத்த சாசனம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்  மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல - பொது முயற்சியான்மை, மலைநாட்டுப் பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்  ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்  திலக் மாரப்பன - வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  ராஜித சேனாரத்ன - சுக...

மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது

Image
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டுள்ள மண்முனை மேற்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிற்கான விசேட அமர்வு இன்று காலை தவிசாளர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.  இதன்போது சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தவிசாளரினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.  அதனைத்தொடர்ந்து தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்புக்கு கோரியபோது இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என சிலர் கூற அங்கு பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்றதை தொடர்ந்து சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.  மீண்டும் சபை கூடிய நிலையில் தமது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசபை உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்ததை தொடர்ந்து அ...

புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படும்

Image
புதிய அமைச்சரவை நாளை காலை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கூறினார்.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.  இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்..

பதுரியன்ஸ் பாஷ் 2018 - மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

Image
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக (சனி 15.12.2018, ஞாயிறு 16.12.2018) நடாத்தப்பட்ட இந்த புட்சல் போட்டியானது மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.  பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இனிதே நிறைவு பெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகான அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது..  லீக் முறையில் நடந்த இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையினர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது. இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ், ரன்னர்ஸ்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதி...

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முகாமைத்துவத் திணைக்களத்தில் முகாமைத்துவப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூயில் கற்று உயர்கல்வியை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்று வியாபார நிருவாக  இளமானி பட்டத்தையும்,கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாக முதுமானி பட்டத்தையும்; பெற்றார். இவர் 2003ஆம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்து பின்னர் விரிவுரையாளராக பதவி பெற்று சிரேஸ்ட விரிவுரையாளராகி தற்போது பேராசிரியராகியுள்ளமை சிறப்பம்சமாகும். மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம் சீனிமுகம்மது முகைதீன் பாவா, இப்றாலெப்பை ஆபிதா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார். மேலும் களணிப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகா...

மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிகமும்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு. எம்.ஜெஸீல்) மருதமுனை மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின் ;( KOPE)  வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிமுக நிகழ்வும் சனிக்கிழமை மாலை(15-12-2018)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.ஏ.அக்ரம் தமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா,ஓய் பெற்ற ஆசிரியை திருமதி அலாவுதீன்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார்,கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு அமைப்பின் உறுப்பினர்களுக்கு  டீ சேட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது

அரசாங்கத்துடன் இணையும் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி இல்லை

Image
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தாண்டி புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.  அந்தக் கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார இதனை கூறியுள்ளார்.  அரசாங்கத்துடன் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்காதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ; பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர

Image
எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.  அதேவேளை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீரவின் பெயரையும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.  எவ்வாறாயினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க முடியும் என்று கூறினார்.

2018ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை

Image
நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 55 இலட்சத்து 92 ஆயிரத்து 96 ஆகும்.  இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்புக்கு அமைவாக, அதாவது 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு உட்பட்ட வகையில் இவ்வாறு கணக்கிடப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.  கடந்த வருட வாக்காளர் பட்டியலிலும் பார்க்க இம்முறை 2 இலட்சத்து 31 ஆயிரத்து 229 பேர் புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலான வாக்காளர்கள் கம்பாஹ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளனர்.  இத்தொகை 17 இலட்சத்து 51 ஆயிரத்து 892 ஆகும். கொழும்பு, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்கள் இதில் முறையே இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் இடம்பெற்றுள்ளன.  குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் திருகோணமலையாகும். எதிர்கால தேர்தல்களுக்கு 2018 ஆண்டு வாக்காளர் இடாப்பே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா

Image
நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா  15.12.2018 சனிக்கிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடை பெற்றது . ரெயின்போ கல்லூரியின் நிருவாகிகளான லாபீர் வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  ரெயின்போ முன்பள்ளி பொறுப்பாளரும் கிராமசேவை உத்தியோகத்தருமான ஆஷிக் தலைமையில் இடம் பெற்ற    இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை டிப்போ முகாமையாளர் வெள்ளைத்தம்பி ஜஹுபர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்  . கல்முனை பிரதேச செயலக முதியோர் சங்க செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.எம்.ஜலாலுதீன்  கெளரவ அதிதியாகவும் , நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஜெ.எம்.ரிஷான் ,லாபிர் வித்தியாலய பகுதி தலைவரும்  நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளருமான     எம்.எல்.எம்.அஸ்ரப் ,   ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது  ...