மண்முனை மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டுள்ள மண்முனை மேற்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிற்கான விசேட அமர்வு இன்று காலை தவிசாளர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் நடந்தது.
இதன்போது சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தவிசாளரினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்புக்கு கோரியபோது இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என சிலர் கூற அங்கு பல்வேறு கருத்து மோதல்கள் நடைபெற்றதை தொடர்ந்து சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை கூடிய நிலையில் தமது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வரவுசெலவுத் திட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேசபை உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்ததை தொடர்ந்து அதனை தவிசாளர் ஏற்றுக்கொண்ட நிலையில் 2019ஆம்ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஏகமனதாக
Comments
Post a Comment