சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முகாமைத்துவத் திணைக்களத்தில் முகாமைத்துவப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூயில் கற்று உயர்கல்வியை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்று வியாபார நிருவாக இளமானி பட்டத்தையும்,கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாக முதுமானி பட்டத்தையும்; பெற்றார்.
இவர் 2003ஆம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்து பின்னர் விரிவுரையாளராக பதவி பெற்று சிரேஸ்ட விரிவுரையாளராகி தற்போது பேராசிரியராகியுள்ளமை சிறப்பம்சமாகும். மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம் சீனிமுகம்மது முகைதீன் பாவா, இப்றாலெப்பை ஆபிதா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார்.
மேலும் களணிப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கலாநிதிப் பட்டத்தையும் ஆங்கில மொழி மூலம் பெற்றவராவார்.
இவர் இந்தியா,நேபாளம்,ஐக்கிய அறபு தேசம்,பாக்கிஸ்தான்,மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும்,கல்லூரி களிலும் நடைபெற்ற பல ஆய்வு மாநாடுகளிலும்,கருத்தரங்குகளிலு ம் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment