நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா
நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா 15.12.2018 சனிக்கிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடை பெற்றது .
ரெயின்போ கல்லூரியின் நிருவாகிகளான லாபீர் வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் ரெயின்போ முன்பள்ளி பொறுப்பாளரும் கிராமசேவை உத்தியோகத்தருமான ஆஷிக் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை டிப்போ முகாமையாளர் வெள்ளைத்தம்பி ஜஹுபர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் . கல்முனை பிரதேச செயலக முதியோர் சங்க செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.எம்.ஜலாலுதீன் கெளரவ அதிதியாகவும் , நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஜெ.எம்.ரிஷான் ,லாபிர் வித்தியாலய பகுதி தலைவரும் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளருமான எம்.எல்.எம்.அஸ்ரப் , ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment