பாராளுமன்றம் கூடியது - இடைக்கால கணக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது


பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் கூடியது. 


புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 



(பிந்திய  செய்தி  - 10.45 am) 



புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 



அத்துடன் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
(பிந்திய  செய்தி  - 11.00 am) 
எரிபொருட்களின் விலைகளை குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவற்றின் விலை குறைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்