Posts

ஹரீஸ் எம்.பியின் அதிரடி நடவடிக்கையினால் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபரின் இடமாற்றம் இரத்து!

Image
  கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆரம்பப் பாடசாலைகளில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் முதன்மையான இடத்தைப் பெறும் என்றால் மிகையாகாது. ஏறக்குறைய 1700 மாணவர்களையும்,சுமார் 70 ஆசிரியர்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் பாடசாலையானது பல்துறைகளிலும் முன்னேறிக் கொண்டு வருகின்றது.  2014ம் ஆண்டு 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் 38 மாணவர்கள் சித்தியடைந்ததும், 2015ம் கல்வியாண்டுக்காக முதலாம் வகுப்பில் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் காட்டிய ஆர்வமும் இந்தப் பாடசாலையின் நிலையை பறைசாற்றுகின்றது. இவ்வாறான நிலையை அந்தப் பாடசாலை அடைந்திருக்கிறது என்றால், அதற்கு நிச்சயமாக அதிபரின் தலைமைத்துவமும், நிருவாகமும் சிறப்பாக அமைந்திருப்பதே காரணம் என பெற்றோர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனா். இத்தகைய நிலையில் தான், அந்தப் பாடசாலையின் அதிபர் திறமையாக அதனை வழிநடாத்தி வருகின்ற போதிலும், சில தனிநபர்கள் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் துணையுடன் அவருக்கு பல தடவைகள் இடமாற்றம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில நாட்களுக்கு முன்னரும் நியாயமற்ற முறைய...

மருதமுனை, பாண்டிருப்பு,பெரிய நீலாவணை பிரதேசங்களில் பல தெருவிளக்குகள் எரியவில்லை கல்முனை மாநகர சபை கவனிக்குமா ?

Image
(பி.எம்.எம்.எ.காதர்) கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மருதமுனை,பாண்டிருப்பு,பெரிய நீலாவணை பிரதேசங்களில்  வீதிகளில் உள்ள பல தெரு விளக்குகள் எரியவில்லை. பல மின் குமிழ்கள் பழுதடைந்த  நிலையிலும்,சில இடங்களில் மின் குமிழ் இல்லாமலும் காணப்படுகின்றது. இதன் காரணமாக இரவு  நேரத்தில் பொது மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். இருள் சூழ்ந்த பிரதேசங்களில் கள்வர்களின் தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே கல்முனை மாநகர சபை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நியமிப்பதற்கு எடுத்த முடிவு சரியானது-டாக்டர் என்.ஆரிப்

Image
கிழக்கு மாகாண  சபையின் முதலமைச்சராக ஹாபீஸ் நசீரை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம்  நியமிப்பதற்கு எடுத்த முடிவு  சரியானது என்றும்  தீர்க்கமானதொரு முடிவென்றும்  சாய்ந்தமருதை சேர்ந்த டாக்டர்  என்.ஆரிப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .  அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  கடந்த ஜனவரி 8ம் திகதி இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்க்கப்படாத தேர்தல் முடிவினை அடுத்து ஏற்பட்ட மாற்றத்தினைத் தொடர்ந்து பல சபைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதிலொன்று தான் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம். ஜனாதிபதித் தேர்தல் வரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும்;, முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்து வந்தன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருந்த, கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்வது யார் என்ற இழுபறியில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி செய்வது என முடிவு காணப்பட்டது. அத்தோடு இழுபறி நிலை ...

கல்முனையில் இஸ்லாமிய ஒற்றுமை மகாநாடு

Image
 (எஸ்.எல்.அப்துல் அஸீஸ் ) ஹுப்புன் சமுக பேரவை ஏட்பாட்டில்  கல்முனையில்  இஸ்லா மிய ஒற்றுமை மகாநாடு நிகழ்வு நாளை (20) மாலை 3.30மணிக்கு கல்முனை கிரீன்பீல்ட் மஸ்ஜித் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.  இந்நிகழ்வில்  சமுக  ஒற்றுமை தொடர்பான  விரிவுரைகள் மற்றும்  மூத்த உலமாக்கள் கொளரவிப்பு போன்றன நிகழவுள்ளதாக அதன் ஏட்பாட்டாளர் மௌலவி எ.எல்.எம்.நாசர் தெரிவித்தார்.  ஹுப்புன் சமுக பேரவையின் தலைவர் உஸ்தாத் எம்.ஆர்.எம். பினாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இதில்  பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், விரிவுரையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் கல்முனைக்குடியில் இரண்டு முக்கிய வீதிகளின் நிர்மானப்பணிகள் நிறுத்தம்.

Image
சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர்  கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அறிக்கை (பி.எம்.எம்.ஏ.காதர்) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் கல்முனைக்குடியில் உள்ள இரண்டு முக்கிய வீதிகளான சாயிபு வீதி, அலியார் வீதி என்பனவற்றின்  நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கத்தைத் தெரிவிக்காவிடின் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன் இலஞ்ச ஊழல் ஆணைக் குழவிடம் முறையிடப்படும் எனத் தெரிவித்து  சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர்  கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.  அந்த அறிக்ககையில் தெரிவித்திருப்பதாவது :- நீண்ட காலமாக கல்முனைக்குடியில் கவனிப்பாரற்றுக் கிடந்த இரண்டு முக்கிய வீதிகளான சாயிபு வீதி, அலியார் வீதி என்பனவற்றை நிர்மானப்பணிப்பதற்கு அரசினால் பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு வீதிகள் தோண்டப்பட்டு வேலைகளும்  ஆரம்பித்து வைக்கப்பட்டன. இருந்த போதிலும் திடீர் என வேலைகள் நிறுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிப் போயுள்ளதாக அறிய முடிகின்றது....

கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

Image
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (10)  திருகோணமலை உட்துறைமுக வீதியலமைந்துள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களினால் 2015 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத்திட்டம் முன்மொழியப்பட்டது. குறித்த வரவுசெலவுத்திட்டம் அமோக ஆதரவுடன் நிறைவேறியது.  இதன் காரணமாக பல தடவை கிழக்கு மாகாண சபை கூடியும் நிறைவேற்ற முடியாமல் இருந்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்பார்த்ததை விடவும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர், 04 அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணையை முன்வைத்த  போது கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளும் இதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும். கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் இதுவரை நியமிக்கப்படாமையால் குறித்த அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை முதலமைச்சரே முன்மொழிய வேண்டியேற்பட்டது.

கல்முனையில் கணித ,விஞ்ஞான மாணவர்களுக்கான பௌதிகவியல் பாட கருத்தரங்கு

Image
  இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கணித ,விஞ்ஞான மாணவர்களுக்கான பௌதிகவியல் பாட கருத்தரங்கு சீமா நிறுவனத்தின் அனுசரணையுடன் கொழும்பு பல்கலைக் கழக சிரேஸ்ட பௌதிகவியல் விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஆர்.டீ .ரோச வினால்  கிழக்கு மாகாண  மாணவர்களுக்கு சாய்ந்தமருது லீ மெரிடியான்ட் மண்டபத்தில் இன்று  (10) நடை பெற்றது .கலந்து கொண்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும்  கல்முனை  வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆரம்ப உரை நிகழ்த்துவதையும் , விரிவுரையாளர்  விரிவுரை நடாத்துவதையும் காணலாம் .

மெட்ரோ பொலிடன் கல்லூரி மன்னார் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

Image
மெட்ரோ பொலிடன் கல்லூரியின் மன்னார் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.  மன்னர் நலன்புரிச் சங்கம் – இலண்டன் அமைப்பினது அனுசரணையில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 32 மாணவர்கள் இதன்போது டிப்ளோமா பட்டத்தை பெற்றுக் கொண்டனர்.  இந்நிகழ்வில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களான ரி. ஏன் மேரி ரொக்ஸி பீரிஸ், ஜேம்ஸ் சுபாஸ் மற்றும் எ.அலன் மேர்சி பிகாடோ ஆகியோருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், விஷேட அதிதியாகவும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டன்லி டீ மெல் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்தி அபிவிருத்தி காண்போம் -ஹிருணிக்கா

Image
கடந்த ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வருகை தரவிருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தார். மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் பொத்துவில்,சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு, ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை செய்வதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வர்த்தக சமூகத் தலைவர் ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எம்.எம்.ஜுனைதீன் ஹிபத்துல் கரீம் உள...

மைத்திரிபால சிறிசேனவின் யஹ பாலனயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பற பாலன!

Image
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதலாவது பாரிய நாடகம் மேடையேற்றப்பட்டது. அமைச்சர் ஹக்கீம் பிரதான பாத்திரம் ஏற்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், அன்வர் ஆகியோர் துணை நடிகர்களாக அற்புதமாக நடித்திருந்தனர். மக்களோ பாவம்... பழைய படங்களில் எம்.ஜி. ஆருக்கு நம்பியார் ஒரு அடிவிட்டாலே (நடிப்புக்காக) உண்மை என நினைத்து கொதித்தெழும் ரசிகர்கள் நிலையில்தான் காணப்பட்டனர். ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சர் பதவி வழங்கியதற்காகவும் அம்பாறை மாவட்டத்தைப் புறக்கணித்ததற்காகவும் ஜெமீலுக்கு அந்தப் பதவியை வழங்கவில்லை என்றும் கல்முனை மகக்ள் கொதிந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அமைச்சர் ஹக்கீமின் கொடும்பாவியையும் எரித்து நின்றனர். தாங்கள் அரகேற்றிய நாடகத்தை மக்கள் உண்மையாக நம்பி விட்டனர் என்ற கேலித்தனத்தில் இவர்கள் காணப்பட்டனர். ஆனால் மக்களோ உண்மையென நம்பியே அனைத்தையும் செய்து தங்களை வருத்தி, பிரிந்து கொண்டனர். இவர்கள் தங்களது நாடகத்துக்கு கௌரவ நடிகர்களாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான...

அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறி்னால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்!– பிரதமர்

Image
வத்தளை பிரதேச சபையின் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றினால், 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நீக்கும் சந்தர்ப்பத்தை நாடு இழக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதுடன் அது சபாநாயகர் ஷாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை இதனால், நிறைவேற்ற முடியாது போகும். நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்த விவாதத்தை நடத்தி உடனடியாக திகதியை ஒத...

மன்னிப்புக் கேட்டார் ஜெமீல்! கட்சியில் சேர்த்தார் ஹக்கீம்!!

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்  கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது  சற்று முன் அமைச்சர் ஹக்கீம் அவர்களினால் அந்த இடைநீக்கத்தை நீக்கியுள்ளார்.  சென்ற 6ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி, கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலை கட்சியின் உறுப்புரிமைகளிலிருந்தும் அவர் கட்சியில் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தினார். இதனடிப்படையில் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு தற்பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இடம்பெற்றுக்கொண்டிக்கின்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், தான் செய்த பிழைகளை மண்ணிக்கும்படி தலைவர் அவர்களிடம் ஏ.எம் ஜெமீல் அவர்கள் மன்னிப்புக்கோரி, தலைவர்கள் அவர்கள் அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு மீண்டும் கட்சியம் நடவடிக்கைகளை ஏ.எம் ஜெமீல் ஆரம்பித்துள்ளார்.  

அம்பாறையில் பெளத்த விகாரைகளுக்கு சொந்தமான 1000 ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாம்

Image
அம்பாறை மாவட்டத்தில் பெளத்த விஹாரைகளுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கபட்டுள்ளது என காணி அமைச்சர் எம் .கே .டி .எஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் . கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த அரசியல்வாதிகளினால் இவ்வாறு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளை அச்சுறுத்தி காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகள் தங்களது நெருக்கமானவர்களுக்கு சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிக்க வழங்கப்பட்டுள்ளது பௌத்த பிக்குகளை ஆயுதம் காட்டி அச்சுறுத்தி விஹாரை காணிகளில் இருந்தவர்களின் வீடுகளை எரித்தே காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. பலவந்தமான அடிப்படையில் ராஜபக்ச அரசாங்கம் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகளை அபகரித்துக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுல்படுத்தப்படாத காரணத்தினால் இந்த அனைத்து குற்றச் செயல்களும் மூடி மறைக்கப்பட்டன. பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள பௌத்த விஹாரை காணிகளில் இதுவரையில் 22 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தி காணிகள் மீள பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சிங்கள...

'முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது'

Image
2012-ம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார். அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரசாங்கக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையில், மீண்டும் அரசாங்கக் கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது என்றார் சம்பந்தர். அரசாங்கக் கூட்டணியிலும் பார்க்க 6 ஆயிரத்து 100 வாக்குகளையே குறைவ...

முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடிய திருப்புகழ் திரு ஆரம் ஓதல் நிகழ்வு

Image
அம்பாறை மாவட்டத்தில் முதற் தடவையாக  கல்முனை நகர் முருகன் ஆலயத்தில் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடிய திருப்புகழ் திரு ஆரம் ஓதல் நிகழ்வு   நேற்று நடை பெற்றது. கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலய பூசகர் ரவிஜீ குருக்கள், முருகன் ஆலய பூசகர் சச்சிதானந்தக் குருக்கள் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த முருகன் அடியார்களால் அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல்கள் பாடுவதை காணலாம் 

ஷிப்லி பாறூக், அலி ஸாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

Image
அகில இலங்கை காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா (ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு) ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று (07) கொழும்பு சந்தித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இந்த்த் தகவலை கட்சியின் செயலாளர் நாயகமும் ராஜாங்க  அமைச்சருமான எம்.ரீ. ஹஸன் அலி சற்று நேரத்துக்கு முன்னர் தெரவித்தார் நாளை (08) காலையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில்  இவர்கள் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர். -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

கிழக்கு விவசாயத்துறை அமைச்சராக சந்திரகாந்தன் நியமனம்?

Image
கிழக்கு மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை  சந்திரகாந்தன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அரச தரப்பு தகவல்கள்  தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிவநேசத்துரை  சந்திரகாந்தனும், அவருடன் புதிதாக இணைந்துள்ள புஸ்பகுமாரும் (இனியபாரதி)  நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது

நாளை அம்பாறை மாவட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ,ஹிருணிக்கா வருகை

Image
    நாட்டுமக்கள்மீதும் ஏழைகள்மீதும் கருணை காட்டி ஏழைகளின் தோழனான  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆட்சிபீடமேற்றுவதற்கு முக்கிய பங்களிப்புச்செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்க குமாரதுங்க அவர்களும்,மேல்மாகாணசபை உறுப்பினரும் , கொலன்னாவ தேர்தல் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவரும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயம் அறியா இளம் கன்றுபோல் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டவருமான ஹிருணிக்கா பிரேமச்சந்திர அவர்களும்   அம்பாறை மாவட்ட  மக்களுக்கு நன்றி செலுத்தவும் மக்களோடு சிறிதுநேரம் கலந்துரையாடவும்  வருகை தரவுள்ளனர். அவர்களுடன் இன்னும் பல விசேடஅதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவ்விழா  ஞாயிற்றுக்கிழமை பிற்  பகல் 3.00 மணிக்கு சாய்ந்தமருது  லீ மெரிடியன் மண்டபத்தில்  ஏ.எல்.ஜுனைதீன்  தலைமையிலும் பிற்பகல் 3.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்திலும்  ஏ.எச்.றமீஸ்  தலைமையிலும்  நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Image
அமைச்சர் ஜோன் அமரதூங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  114 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பம் இட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

Image
கடந்த 29ம் திகதி (29.01.2015) நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவே இதன்போது எதிராக வாக்களித்தவராவார்.   மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, கீதாஞ்சன குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, குணசேகர மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.  

மருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான “முன்மொழிவு களும், ஆவணப்படுத்தலும்” தொடர்பான ஒன்று கூடல்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான “முன்மொழிவு களும்,  ஆவணப்படுத்தலும்” தொடர்பான ஒன்று கூடல்  (07-02-2015) மருதமுனை பொது நூலக மண்டபத்தில்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉச்பீட உறுப்பினரும்,மருதமுனை அமைப்பாளரும்.கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இந்த உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான “முன்மொழிவுகளும்  ஆவணப்படுத்தலும்” நிகழ்வு  நடைபெற்றது. இங்கு கல்வி,சுகாதாரம்,வீதி நிர்மானம்,குழாய் நீர் , வடிகான் புனரமைப்பு,நூலக அபிவிருத்தி,பாடசாலைகளுக்கான கட்ட நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்கள்,மத்ரசாக்கள்   உள்ளீட்ட மருதமுனையின் முக்கிய அபிவிருத்தி பற்றி முழுமையாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான திட்ட வரைவுகளும் தயாரிக்க  முன்மொழியப்பட்டது. இவ்வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் ஊடாக முன்னெடுப்பதற்கும் முன்மொழியப்பட்டது.  இந்த நிகழ்வில்  மௌலவிகளான ஏ.அபூ உபைதா மதனி.ஏ.ஆர...

அமைச்சர்களால் இணைப்பாளர் நியமனக் கடிதம் வழங்கப் படாத இணைப்பாளர்கள் எனக் கூறுபவர்கள் கைது செய்யப் பட வேண்டும்

Image
அம்பாறை மாவட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் பின்னர்  அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர்  அமைச்சர்களின்  இணைப்பாளர்கள்  என்று கூறிக் கொண்டு ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க முற்படுகின்றனர் . இவ்வாறானவர்களை  பொலிசார்  கைது செய்ய வேண்டும் . மக்களும் இவ்விடயத்தில் அவதானத்துடன் செயல்பட  வேண்டும் என்று  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின் உப தலைவர்  சிரேஸ்ட ஊடகவியலாளர்  ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்துள்ளார் . குறிப்பாக  கல்முனை பிரதேசத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் அதிகம் காணப் படுகின்றன . கல்முனை  பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்தில்  கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் இருக்க  வேறு ஒருவரால் கூட்டம் நடத்தப் பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன . கூட்டத்தை  ஏற்பாடு  செய்தவர்  என்று கூறுபவர்  தான் ஒரு அமைச்சரின்  இணைப்பாளர் என்றும்   எனது  ஏற்பாட்டில்தான்  இந்த கூட்டம்  நடை பெற்றது  என்றும் இந்த செய்தியை பிரசுரித்த செய்தியாளர் மறுப்பு செய்தி பிரசுரிக்க வே...

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அலிஷாஹிர் மெளலானா பதவிப்பிரமாணம்

Image
கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக  அலிசாஹிர் மௌலானா இன்று ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார் இவர் ஏராவூர் நகரபிதாவாக இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தளுவியிருந்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த பிரதியமைச்சர் அமீர் அலி பாராளுமன்றத்துக்கு சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகரின் ஆட்சி முஸ்லிம் காங்கிரசிடம் இருந்து கைமாறும் நிலையில்!

Image
கல்முனை மாநகரின் முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்று அணி ஒன்றில் இணையவுள்ளதாக நம்பகமாக தெரிய வருகிறது. சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு உறுப்பினரும் மருதமுனையை சேர்ந்த  மற்றொரு மாநகர சபை உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி மாற்று அணியில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த இருவரும் கட்சி மாறுகின்ற போது கல்முனை மாநகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் ஆட்சி செல்லும் வாய்ப்பு உள்ளது. ஹக்கீமின் தான்தோன்றித்தனமான முடிவே இக்கட்சி மாறும் படலம் எனவும் மருதமுனையை சேர்ந்தவர் பிரதி மேயர் பதவிக்கு தன்னை நியமிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இணக்கக் கடிதத்தில் தவம் கையொப்பமிட்டார் நிஸாம் காரியப்பர் என்னை அவமதித்தார்!

Image
- -------------------------------------------------------------------------- அனைத்தையும் அம்பலப்படுத்தும் ஜெமீல் --------------------------------------------------------------------------- கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் கருத்துகளைப் பறிமாறினார். பல விடயங்கள் அவரால் கூறப்பட்டது. இருப்பினும் கட்சியின் நலன் கருதி நான் சில விடயங்களை தணிக்கை செய்து கொள்ள விரும்புகிறேன். அவர் கூறிய சில விடயங்களை மட்டும் இங்கு பதிவிடுகிறேன். ------------------------------------------------------------------------------------------------------- 1.ஹாபிஸ் நஸீரை கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்வதற்கான இணக்கக் கடிதத்தை முதலில் வழங்கியவர் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம். அவர் நேற்றுக் காலை 6.30 மணிக்கு அமைச்சர் ஹக்கீம் அவர்களின் வீட்டுக்குச் சென்று தனது இணக்கக் கடிதத்தை கையளித்திருந்தார். 2. வடமாகாண சபையின் முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறும...