வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் கல்முனைக்குடியில் இரண்டு முக்கிய வீதிகளின் நிர்மானப்பணிகள் நிறுத்தம்.
சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அறிக்கை
(பி.எம்.எம்.ஏ.காதர்)
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் கல்முனைக்குடியில் உள்ள இரண்டு முக்கிய வீதிகளான சாயிபு வீதி, அலியார் வீதி என்பனவற்றின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கத்தைத் தெரிவிக்காவிடின் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன் இலஞ்ச ஊழல் ஆணைக் குழவிடம் முறையிடப்படும் எனத் தெரிவித்து சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.
அந்த அறிக்ககையில் தெரிவித்திருப்பதாவது :- நீண்ட காலமாக கல்முனைக்குடியில் கவனிப்பாரற்றுக் கிடந்த இரண்டு முக்கிய வீதிகளான சாயிபு வீதி, அலியார் வீதி என்பனவற்றை நிர்மானப்பணிப்பதற்கு அரசினால் பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு வீதிகள் தோண்டப்பட்டு வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இருந்த போதிலும் திடீர் என வேலைகள் நிறுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிப் போயுள்ளதாக அறிய முடிகின்றது.
வீதி நிர்மாணப் பணிகளுக்காக ஒப்பந்தக்காரர்களிடம் பெறப்படுகின்ற கொமிஷனில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக ஒப்பந்தக்காரர்கள் இந்த வேலைகளை கைவிட்டதாகவும் அதனால் இந்த வேலைகளுக்கான பணம் திரும்பி விட்டதாகவும் நம்பகமாகத் தெரியவருகின்றது. எனவே இவ்விடயம் தொர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர் வரும் வெள்ளிக் கிழமைக்குள் பொது மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் .
இல்லையேல் மக்கள் போரட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமும் முறையிடப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொர்பாக மேற்குறிப்பட்ட வீதிகளை நிர்மாணிக்கும் பொறுப்பில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று அலுவலக பொறியிலாளர் அலியார் அவர்களுடன் தொலை பேசியில் தொர்பு கொண்டு கேட்டேன் அவர் சொன்னார் இந்த விடயம் தொடர்பில் விளக்கம் சொல்ல எனக்கு அனுமதி இல்லை சம்பந்தப்பட்ட அமைச்சு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று
சம்பந்தப்பட்ட அமைச்சு அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் பலன் கிடைக்கவில்லை.
Comments
Post a Comment