மருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான “முன்மொழிவு களும், ஆவணப்படுத்தலும்” தொடர்பான ஒன்று கூடல்

(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான “முன்மொழிவு களும்,  ஆவணப்படுத்தலும்” தொடர்பான ஒன்று கூடல்  (07-02-2015) மருதமுனை பொது நூலக மண்டபத்தில். 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிஉச்பீட உறுப்பினரும்,மருதமுனை அமைப்பாளரும்.கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இந்த உட்கட்டமைப்பு வளமாக்கல் தொடர்பான “முன்மொழிவுகளும்  ஆவணப்படுத்தலும்” நிகழ்வு  நடைபெற்றது.
இங்கு கல்வி,சுகாதாரம்,வீதி நிர்மானம்,குழாய் நீர் , வடிகான் புனரமைப்பு,நூலக அபிவிருத்தி,பாடசாலைகளுக்கான கட்ட நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்கள்,மத்ரசாக்கள்   உள்ளீட்ட மருதமுனையின் முக்கிய அபிவிருத்தி பற்றி முழுமையாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான திட்ட வரைவுகளும் தயாரிக்க  முன்மொழியப்பட்டது.
இவ்வேலைத்திட்டங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் ஊடாக முன்னெடுப்பதற்கும் முன்மொழியப்பட்டது. 
இந்த நிகழ்வில்  மௌலவிகளான ஏ.அபூ உபைதா மதனி.ஏ.ஆர்.செயினுலாப்தீன் ஷர்க்கி எம்.எல்.முபாறக் மதனி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் தலைவர் ஏ.எம்.அபுல்ஹக்கீம் ஆசிரியர், கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்,ஒய்வூ பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம்,பிரதிக்கல்விப்பணிப்பாளர். பி.எம்.யஸிர் அறபாத் உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப்,  டாக்டர்களான ஏ.எல்.எம்.மிஹ்லார், ஏ.ஆர்.எம்.ஹாரிஸ்,பி.எம்.சுகைப்தீன்.விரிவுரையாளர் எம்.எம்.பாஸில்,ஆகியோருடன் அதிபர்கள்.ஆசிரியர்கள்,பள்ளிவாசல்களின் தலைவர்கள்,வர்த்தகர்கள் உள்ளீட பலர் கலந்து கொண்டனர்.




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்