மெட்ரோ பொலிடன் கல்லூரி மன்னார் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

மெட்ரோ பொலிடன் கல்லூரியின் மன்னார் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. 
மன்னர் நலன்புரிச் சங்கம் – இலண்டன் அமைப்பினது அனுசரணையில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 32 மாணவர்கள் இதன்போது டிப்ளோமா பட்டத்தை பெற்றுக் கொண்டனர். 
இந்நிகழ்வில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களான ரி. ஏன் மேரி ரொக்ஸி பீரிஸ், ஜேம்ஸ் சுபாஸ் மற்றும் எ.அலன் மேர்சி பிகாடோ ஆகியோருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், விஷேட அதிதியாகவும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டன்லி டீ மெல் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்