ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்தி அபிவிருத்தி காண்போம் -ஹிருணிக்கா

கடந்த ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்காக அம்பாறை மாவட்டத்துக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வருகை தரவிருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட குழுவினர் பொத்துவில்,சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு, ஜனாதிபத்தி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வெற்றிக்காக வாக்களித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க அவர்களது சார்பில் நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்துவதன் ஊடாக வேலைவாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை செய்வதற்காக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வர்த்தக சமூகத் தலைவர் ஏ.ஆர்.எம்.அஸீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எம்.எம்.ஜுனைதீன் ஹிபத்துல் கரீம் உள்ளிட்ட பிரமுகர்களுடம் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் வருகை தந்த பிரமுகர்களும் பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்