அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறி்னால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்!– பிரதமர்

வத்தளை பிரதேச சபையின் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றினால், 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நீக்கும் சந்தர்ப்பத்தை நாடு இழக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதுடன் அது சபாநாயகர் ஷாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை இதனால், நிறைவேற்ற முடியாது போகும்.
நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்த விவாதத்தை நடத்தி உடனடியாக திகதியை ஒதுக்குமாறு, பிரதமர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்