Posts

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாநாளை சனிக்கிழமை

Image
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா, நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்களும், இஸ்லாமிய அறபு கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 107 மாணவர்களும், கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த 134 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 33 மாணவர்களும், வியாபார நிருவாக முதுமாணிப் பட்டமாக 09 பேரும், கலாநிதிகளாக இருவரும் என மொத்தம் 443 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். வேந்தர் கலாநிதி அச்சி முகம்மட் இஸாகினால் ஆரம்பித்து வைக்கவுள்ள இந்த நிகழ்வில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நட்பிட்டிமுனையை சேர்ந்த இருவர் கொரியாவுக்குப் பயணம்

Image
ஆசிய மன்றத்தின் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் மாகாண சபையின் சில உயர் அதிகாரிகளும் அடங்கிய  குழுவொன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (25) தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஆசிய மன்றம் தனது செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற கல்முனை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபைகள் மற்றும் அம்பாறை நகர சபை ஆகியவற்றின் சார்பில் தலா இருவர் வீதம் எட்டுப் பேர் உட்பட மொத்தம் 15 பேர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர் என ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார். அதன் அடிப்படையில்  நட்பிட்டிமுனையை  சேர்ந்தவர்களான கல்முனை மாநகர சபையின் சார்பில் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், உள்ளூராட்சி உதவியாளர் எம்.சி.சர்ஜூன் தாரிக் அலி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் .

அம்பாறை SLMC க்குள் குழப்பம் தீர்வுக்கு உயர்மட்ட சந்திப்பு

Image
கல்முனை தொகுதியின் ஸ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (22) மாலை, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தலைவர் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.  சமகால தேசிய அரசியல் நிலவரம், மாநகர சபையின் அண்மைக்கால நிலைப்பாடு மற்றும் பிறவிடயங்கள் பற்றி ஆராயப்பட்டது என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட  ஸ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின்  மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார். இச்சந்திப்பில் சமகால தேசிய அரசியல் நிலவரம், மாநகர சபையின் நிலைப்பாடு மற்றும் பிறவிடயங்கள் பற்றி விரிவாக மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம். எஸ். தௌபீக்,  எம்.எஸ்.எம்.அஸ்லம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவர ஏ.எம். ஜெமீல், முதல்வர்  எம்.நிஸாம் காரியப்பர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட

நற்பிட்டிமுனை பிறேவர் அணி தமிழ்வாணன் நினைவுக் கிண்ணத்தை சுவீகரித்தது!

Image
கல்முனை சேனைக்குடியிருப்பு வின்னேர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சுமார் மூன்று வார காலமாக சேனைக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கல்முனைப் பிராந்தியத்திலிருந்து சுமார் 24 கழகங்கள் பங்கு கொண்டன. இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (18) நடைபெற்றது. இறுதிப்போட்டியில் கல்முனைப் பாண்டிருப்பு 'துளிர் விளையாட்டுக் கழகம் பிறேவர் விளையாட்டுக் கழகத்துடன் மோதிக்கொண்டது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பிறேவர் பத்து ஓவர்களில் 101 ஓட்டங்களை பெற்று இமாலய இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்தது. இதில் அணித்தலைவர் ரிலாஸ் ஆஷிக், கிபாஸ் சிறப்பான அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர் எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துளிர் விளையாட்டுக்கழகம் ஒரு கட்டத்தில் 22/9 விக்கட்டுக்களை இழந்திருந்தனர். எனினும் அதன் அணித்தலைவர் போராடி தமது ஓட்ட எண்ணிக்கையை 48 க உயர்த்தி சகல விக்கட்டுக்களையும் தாரை வார்த்தனர்.  இதில் இஸ்மத் கிபாஸ் லிஹாஸ் மற்றும் கமீரின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகம் கொட

சிறுநீரக கற்களின் வடிவம்

Image
இங்கே படத்தில் காட்டப்பட்டிருப்பவை புத்தாண்டு பலகாரம் என்று நினைக்கவேண்டாம் . சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த ஆதார வைத்திய சாலையில் நடை பெற்ற இரண்டு சிறு நீராக சத்திர சிகிச்சையின் போது  அகற்றப்பட்ட சிறுநீரக கற்களே இதுவாகும் . இதனை  சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் A .W .A .சமீம் அகற்றியுள்ளார். 

தனியார் போக்குவரத்து தொடர்பான நடமாடும் சேவை இன்று கல்முனையில்

Image
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று தனியார் போக்குவரத்து தொடர்பான நடமாடும் சேவை இன்று கல்முனையில் இடம் பெற்றது. தனியார் போக்குவரத்து அதிகார சபை தலைவர் ஜே.எம்.கருணாரத்ன தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் இடம் பெற்ற நடமாடும் சேவையில் தனியார் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள்,மற்றும் சாரதிகளின் பிரட்சினைகளுக்கு அங்கு தீர்வு காணப்பட்டதுடன் வீதி அனுமதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப் பட்டன . இந்த நடமாடும் சேவையில் தனியார் போக்குவரத்து அதிகார சபை  பணிப்பாளர் டபிள் யு எம்.எச்.உதயக்குமார ,பணிப்பாளர் சி.எம்.நந்தசேன உட்பட அதிகார சபை  பலரும் கலந்து  கொண்டனர்

அருட்சகோதரர் 'ஸ்டீபன் மத்தியு ' வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது நற்பிட்டிமுனை ப்றேவேர் அணி

Image
  அருட்சகோதரர் 'ஸ்டீபன் மத்தியு  2014' வெற்றிக் கிண்ணத்திற்காக கல்முனை டொல்பின் வி.க நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கார்மேல் பாத்திமா கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது நற்பிட்டிமுனையின் ப்றேவேர் விளையாட்டுக் கழகமும் பாண்டிருப்பு சல்லேஞ்ஜெர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டது. இவ்விறுதிப் போட்டியில் நற்பிட்டிமுனை ப்றேவேர் அணி 10 ஓவரில் 107 ஓட்டங்களை பெற்று உறுதியான இலக்கை எதிரணிக்கு வெற்றி இலக்காக தீர்மானித்தது.  எனினும் எதிரணி ப்றேவேர் அணியின் துல்லியமான பந்து வீச்சு சிறந்த களத்தடுப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுள் சுருண்டது. இதில் அணித்தலைவர் ரிலாஸ் அசீசுல்லாஹ், கமீர் லிஹாஸ் கிபாஸ் மற்றும் இஸ்மத் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் பந்துவீச்சு என்பன எதிரணியை சிதறடித்தது. இப்போட்டியில் பரிசில்களை அருட்சகோதரர் எஸ்ஏ.ஸ் ரீபன் மத்தீயு உட்பட டொல்பின் கழக அங்கத்தவர்கள் வழங்கி வைத்தனர். சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குகொண்டு ஒரு மாதகாலமாக இந்த சுற்றுப்போட்டி நடை பெற்று வந்தமை குறிப்பிடத

மாவடிப்பள்ளி கமு/அல் -அஷ்ரப் மகா வித்தியாலயத்துக்கு தேசிய பசுமை விருது

Image
 மத்திய  சுற்றாடல் அதிகார சபையினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற  " தேசிய பசுமை " விருதுக்கான  2013/2014 போட்டித்தொடரில்  கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கமு/அல் -அஷ்ரப் மகா வித்தியாலயத்துக்கு  வெண்கல விருது கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த 2010/2012 ஆம் வருடமும் இப்பாடசாலை திறமை விருதினை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக இவ்விருதினை பெற்ற இப் பாடசாலை  அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீனை பாராட்டும் நிகழ்வு  இன்று (13) கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெற்றது . வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதிக் கல்விப்    பணிப்பாளர்  ஐ.எல்.ஏ.ரஹீம்,கணக்காளர்  எல்.ரீ .சாலிதீன் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கல்முனை மாநகர சபைஅதிகாரியை தாக்கியதை கண்டித்து பணிபகிஸ்கரிப்பு

Image
கல்முனை மாநகர சபை  செயலாளர் கே.புலேந்திரன்  மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பணி  பகிஸ்கரிப்பில் இறங்கியுள்ளனர். இந்த பணி  பகிஸ்கரிப்பு  தற்போது இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது .  

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் முருகேசு இராஜேஸ்வரன் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Image
  கிழக்கு மாகாண  சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பேராசிரியர் முருகேசு இராஜேஸ்வரன் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் பாட சாலைகளுக்கு தனது நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரங்களும் ,அச்சு பதிப்பு இயந்திரங்களும் வழங்கி வைத்தார் . கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தலைமையில் இன்று வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பாண்டிருப்பு விஷ்ணு மகாவித்தியாலயம்,நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலயம் ஆகியவற்றுக்கு போட்டோ கொப்பி  இயந்திரங்களும்,கல்முனை கிண்டர் பேக் முன்பள்ளிக்கு கணணி அச்சு இயந்திரமும் மாகாண  சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப் பட்டன . குறித்த பாடசாலைகளின் அதிபர்களும்  வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில் வாகனம்,ஏ.சி.எம்.தௌபீக் ,கணக்காளர் எல்.ரீ.சாலிதீன்  ஆகியோரும் கலந்து கொண்டனர் . 

தந்தையின் நினைவாக தனயனின் சமுக சேவை

Image
காலம் சென்ற தனது தந்தை ஏ.சி.ஏ. வாஜீட்  அவர்களது நினைவாக  அவரது  புதல்வரான  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள் யு .எம். சமீம்  நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த  வறிய குடும்பங்களை சேர்ந்த சிறார்களுக்கு  இலவசமாக கத்னா செய்து வைத்தார் . நற்பிட்டிமுனை  மென்ஸ்  சமூகசேவை அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு வறிய  குடும்பங்கள் என அடையாளப் படுத்தப்பட்ட சிறார்களுக்கு  இந்த இலவச கத்னா வைபவம் நேற்று மருதமுனையில் உள்ள வைத்திய நிபுணரின் இல்லத்தில்  நடத்தி வைக்கப் பட்டது. வறிய குடும்பத்தில் உள்ள ஏழை சிறார்களுக்கு  தனது தந்தையின் நினைவாக இவ்வாறான  பாரிய உதவியை இறைவனுக்காக வேண்டி எமது கிராமத்தில் செய்ய முன் வந்த வைத்திய நிபுணருக்கு நற்பிட்டிமுனை கிராம மக்கள் சார்பில்  மென்ஸ்  சமுக சேவை அமைப்பினர் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

ரவூப் ஹக்கீம் தாத்தாவானார்

Image
 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய மகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை 10-05-2014 அன்று அவருக்கு  பேத்தி கிடைக்கப்பெற்றுள்ளது. அதனையே இங்கு காண்கிறீர்கள்.

கல்முனை சாஹிபு வீதி காபட் இடும் வேலைகள் இன்று ஆரம்பிக்கப் பட்டது.

Image
இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த கல்முனை சாஹிபு வீதி காபட்  இடும் வேலைகள் இன்று ஆரம்பிக்கப் பட்டது. 4.5கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வீதி அபிவிருத்திப் பணிகள்  ஒருவார காலத்தில் நிறைவு பெறவுள்ளது. விலை மாற்றம் காரணமாக ஒப்பந்தகாரரினால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட இவ்வீதி அபிவிருத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் அதிரடி நடவடிக்கையினால் மீண்டும் அப்பணி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவி எம். ஐ. பர்ஹத் பர்ஹானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வூ

Image
2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பாPட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரி மாணவி எம். ஐ. பர்ஹத் பர்ஹானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வூ அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். எம். எம். இஸ்மாயில்> அக்கரைப்பற்று கூட்டுறவூச்சங்கத் தலைவர்  சாமசிறி எம். ஐ. எம். றபீக் ஆகியோர்  மாணவிக்கு பரிசு வழங்குவதையூம். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத் தலைவர் கலாபூஷணம் மீரா இஸ்ஸடீன்> மாணவியின் தந்தை  ஊடகவியலாளர் யூ+. எம். இஸ்ஹாக் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர் 

அரசாங்க பாடசாலைகளில் தற்போது 1048 ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

Image
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் போது ஆங்கில பாடத்தில் பேச்சு மற்றும் கிரகித்தல் முறைமையையும் உள்ளடக்கி அதற்கு  20 புள்ளிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த முறைமை  2018 இற்கு பின்னர் செயற்படுத்தப்படுமெனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.    பாராளுமன்றத்தில் நேற்று  வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி. சஜித் பிரேமதாச அரச பாடசாலைகளில் ஆங்கில மொழி  ஆசிரியர்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  சஜித் பிரேமதாச எம்.பி.யின் கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்  ;   அரசாங்க பாடசாலைகளில் தற்போது  1048 ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதற்கு நாட்டில் ஆங்கில மொழி பட்டதாரிகள் குறைந்தளவில் இருப்பதே காரணமாகும்.   எவ்வாறாயினும் கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு ஆங்கில மொழி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேலதிகமாக டிப்ளோமா பட்டதாரி ஆசிரியர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இதேவேளை குறித்த ஆசிரியர் இடைவெளிகளை நிரப்ப

ஜனாதிபதித் தேர்தலா? பொதுத்தேர்தலா? முதலில் எதனை நடத்துவது? இன்று தீர்மானிக்கப்படும்

Image
பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பதனை இன்று வெள்ளிக்கிழமை ஆளும் கட்சி தீர்மானிக்கும் என சிங்கள பத்திரிகையொன்று ö சய்தி வெளியிட்டுள்ளது.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு  ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசப்படவுள்ளன.  எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் எப்போது நடத்துவது என்பது குறித்தும் ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்ச்சைக்குரிய தம்புள்ளை பள்ளிக்கு ஹரீஸ் எம்.பீ விஜயம் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பஸிலினைச் சந்தித்து வேண்டுகோள்!

Image
(யு.எம்.இஸ்ஹாக் )  தனிநபர்களோ, அமைப்புக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்க முடியாது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினை உடன் பெற்றுத் தருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தம்புள்ள பள்ளிவாசலினை ஊடறுத்து வீதி நிர்மாணிப்பதற்கு நேற்று முந்தினம் தம்புள்ள விகாராதிபதி தலைமையிலான குழுவினர் பள்ளிவாசலினை புள்டவ்சர் கொண்டு இடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்;கை சம்பந்தமாக ஏற்பட்ட பதற்ற நிலையினை அவதானிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (08) தம்புள்ள பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார். இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும், ஜமாஅத்தினருடனும் அங்குள்ள பதற்றமான சூழல் பற்றி கலந்துரையாடி நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாசலினை ஊடறுத்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியினை கண்டு பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ச்சி அடைந்தா. இதன் நிமித்

இரு தினங்கள் மதுபானம் விற்கத் தடை!

Image
வெசக் உற்சவ காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 15 திகதி வரையிலான இரு தினங்களில் நாட்டில் உள்ள சகல மது விற்பனை சாலைகளை மூடுமாறும் ஏனைய பெரிய வர்த்தக நிலையங்களில் மது விற்பனையை நிறுத்துமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.   அத்துடன் இத்தினங்களில் இறைச்சிக் கடைகள், ரேஸ் சூதாட்டம், கெசினோ நிலையங்களை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் வெசக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாட்டில் உள்ள சகல அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண படை வீரர்களுக்கு கௌரவம்

Image
இலங்கைத்தீவில் சமாதானக்காற்றை சுவாசிப்பதற்கு தங்களது உயிரையும் உடலையும் அர்ப்பணித்த துணிச்சல்மிகு படை வீரர்களை நினைவுகூறும் கிழக்கு மாகாண படைவீரர் கௌரவிப்பு விழா இம் மாதம் 12 ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வளாகத்தில் நடைபெறவுள்ளது. கிழக்க மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரமவின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாவட்ட அரசாங்க அதிபர் ரீ.ரீ.ஆர் டீ. சில்வா, பல்வேறு அரசியல் பிரமுகர்கள்,முப்படை வீரர்கள், உட்பட பலரும் கலந்து கொள்வர்.

கல்முனையில் 'ஜனாதிபதி புலமைப்பரிசில்'வழங்கும் நிகழ்வு!

Image
கல்முனை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நிதியத்தினால் 'ஜனாதிபதி புலமைப்பரிசில்'; வழங்கும் நிகழ்வு நேற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்புலமைப்பரிசில் நிதியினை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.மயில்வாகனம்,ஏ.சி.எம்.தௌபீக் ,பீ.எம்.வை.அரபாத்,எஸ்..எல்.ஏ.ரஹீம், கணக்காளர்  எல்,ரீ.சாலிதீன்  நிருவாக  ஏ.ஜுனைதீன் அதிகாரி உள்ளிட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது; 101 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு

தேசத்திற்கு சேவை என்னும் அம்பாறை மாவட்ட இளைஞர் கட்டட நிர்மாண சமூக சேவை ஒன்றியம்

Image
(அகமட் எஸ். முகைடீன்) தேசத்திற்கு சேவை என்னும் அம்பாறை மாவட்ட இளைஞர் கட்டட நிர்மாண  சமூக சேவை ஒன்றித்தின் போசகராக செயற்படுமாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபிடம் அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ்வமைப்பின் கூட்டத்தின்போதே மேற்படி கோரிக்கையினை பிரஸ்தாபித்தனர். இவர்களின் இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சிராஸ் மீராசாஹிப் இங்கு உரையாற்றுகையில். எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது சமூக நலனில் அக்கறையுடன் சேவையாற்ற தயாராக உள்ள இவ்வமைப்பின் போசகராக செயற்படுவதில் மகிழ்வடைகின்றேன்.     இவ்வமைப்பானது எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்ற மதஸ்தலங்களில் சிரமதான பணிகளை முன்னெடுக்கவுள்ளனர். அத்தோடு வறிய குடும்பங்களுக்கும் மதஸ்தலங்களுக்கும் மின்னிணைப்பு, நீர் குழாய் பொருத்துதல், மின் உபகரணங்கள் பழுது பார்த்தல் போன்ற சேவைகளை இலவசமாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சமூக சேவைகளை வழங்குவதோடு இவ்வமைப்பின் அங்கத்தவர்