அம்பாறை SLMC க்குள் குழப்பம் தீர்வுக்கு உயர்மட்ட சந்திப்பு
கல்முனை தொகுதியின் ஸ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரிதிநிதிகள் மற்றும் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (22) மாலை, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் தலைவர் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
சமகால தேசிய அரசியல் நிலவரம், மாநகர சபையின் அண்மைக்கால நிலைப்பாடு மற்றும் பிறவிடயங்கள் பற்றி ஆராயப்பட்டது என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சமகால தேசிய அரசியல் நிலவரம், மாநகர சபையின் நிலைப்பாடு மற்றும் பிறவிடயங்கள் பற்றி விரிவாக மிக நீண்ட நேரம் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம். எஸ். தௌபீக், எம்.எஸ்.எம்.அஸ்லம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவர ஏ.எம். ஜெமீல், முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அ
ஸ்ரீ லங்கை முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளையில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நியமனம் பற்றி ஆராயப்படுமென ஊகங்கள் அனுமானங்கள் தெரிவித்திருந்த போதிலும், இங்கே ஏனைய விடயங்கள் பற்றியே முக்கியமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment