தேசத்திற்கு சேவை என்னும் அம்பாறை மாவட்ட இளைஞர் கட்டட நிர்மாண சமூக சேவை ஒன்றியம்

(அகமட் எஸ். முகைடீன்)

தேசத்திற்கு சேவை என்னும் அம்பாறை மாவட்ட இளைஞர் கட்டட நிர்மாண  சமூக சேவை ஒன்றித்தின் போசகராக செயற்படுமாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிபிடம் அவ்வமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ்வமைப்பின் கூட்டத்தின்போதே மேற்படி கோரிக்கையினை பிரஸ்தாபித்தனர்.

இவர்களின் இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சிராஸ் மீராசாஹிப் இங்கு உரையாற்றுகையில். எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது சமூக நலனில் அக்கறையுடன் சேவையாற்ற தயாராக உள்ள இவ்வமைப்பின் போசகராக செயற்படுவதில் மகிழ்வடைகின்றேன்.  







இவ்வமைப்பானது எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்ற மதஸ்தலங்களில் சிரமதான பணிகளை முன்னெடுக்கவுள்ளனர். அத்தோடு வறிய குடும்பங்களுக்கும் மதஸ்தலங்களுக்கும் மின்னிணைப்பு, நீர் குழாய் பொருத்துதல், மின் உபகரணங்கள் பழுது பார்த்தல் போன்ற சேவைகளை இலவசமாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு சமூக சேவைகளை வழங்குவதோடு இவ்வமைப்பின் அங்கத்தவர்களின் கல்வி வளர்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். எனவே இவ்வமைப்பில் உள்ளவர்களின் கல்வித் தராதரங்களை உயர்த்தி வெளிநாட்டு தொழில் சந்தைக்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளை செயற்படுத்துவதோடு ஆங்கில கல்வியினையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்