சர்ச்சைக்குரிய தம்புள்ளை பள்ளிக்கு ஹரீஸ் எம்.பீ விஜயம் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பஸிலினைச் சந்தித்து வேண்டுகோள்!

(யு.எம்.இஸ்ஹாக்தனிநபர்களோ, அமைப்புக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்க முடியாது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினை உடன் பெற்றுத் தருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசலினை ஊடறுத்து வீதி நிர்மாணிப்பதற்கு நேற்று முந்தினம் தம்புள்ள விகாராதிபதி தலைமையிலான குழுவினர் பள்ளிவாசலினை புள்டவ்சர் கொண்டு இடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்;கை சம்பந்தமாக ஏற்பட்ட பதற்ற நிலையினை அவதானிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (08) தம்புள்ள பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார்.

இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும், ஜமாஅத்தினருடனும் அங்குள்ள பதற்றமான சூழல் பற்றி கலந்துரையாடி நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாசலினை ஊடறுத்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதியினை கண்டு பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ச்சி அடைந்தா.

இதன் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தம்புள்ள பள்ளிவாசலில் இருந்தவாறே பொருளாதார அபிவிருத்தி அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடன் சந்திப்பதற்கான நேரத்தினை தருமாறு கேட்டுக்கொண்டதற்கினங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்குமிடையில் இன்று அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,

தம்புள்ள பள்ளிவாசலினை ஊடறுத்து புதிய வீதி நிர்மாணிப்பதாயின் பள்ளிவாசலினை முற்றாக அங்கிருந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். இவ்விடயம் நாட்டில் ஒரு அசாதாரண நிலமையினை ஏற்படுத்துவதுடன் இது முஸ்லிம்களுக்குச் செய்யும் அநியாயமாகும் என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.





தம்புள்ள பள்ளிவாசலினை ஊடறுத்து வீதி நிர்மாணிப்பது சம்பந்தமாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ வீதி அபிவிருத்தி அதிகார சபையுடனும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடனும் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் உத்தியோகபூர்வமாக வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவில்லை எனவும் இதனை அங்குள்ள விகாராதிபதியும் ஒரு குழுவுமே மேற்கொள்கின்றனர் என அமைச்சருக்கு தெரியவந்தது.

தனிநபர்களோ, குழுக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்கு முடியாது என தெரிவித்த அமைச்சர் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தம்புள்ள விகாராதிபதி மற்றும் அங்குள்ள குழுக்களை உடன் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த்துடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியினை சந்தித்து இவ்விடயம் குறித்து பேசுவதற்கு ஏற்பாட்டினை செய்து தருவாக அமைச்சர் தெரிவித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்