Posts

Showing posts with the label அபிவிருத்தி

சம்மாந்துறையில் விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு நிரந்தர கட்டிடம்

Image
   சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்    சிஹாமா  சியாஸின் கோரிக்கைக்கு ஜப்பான் நாட்டு மக்கள் பிரதிநிதிகள்  இணக்கம்  சம்மாந்துறை பிரதேச சபை  அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சிஹாமா சியாஸின்  வேண்டுகோளுக்கமைய  சம்மாந்துறை அல் - அர்ஷாத் மகாவித்தியாலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் நலன் கருதி ஜப்பான் நாட்டு  மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் சகல வசதியும் கொண்ட  நிரந்தரக் கட்டிடமொன்று  அமைப்பதற்கும்  , சம்மாந்துறை  வண்டு  வாய்க்காலுக்கு  மேலாக பாலம் ஒன்றை அமைப்பதற்கும்  திட்டமிடப்படுள்ளது .  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்  சிஹாமா சியாஸ் ஜப்பான் நாட்டுக்கான தூதரகத்துக்கு குறித்த வேலைத் திட்டங்கள் தொடர்பாக  திட்ட  முன் மொழிவொன்றை வழங்கி குறிப்பிட்ட இரு வேலைத்திட்ட்ங்களையும் நிர்மாணிக்க உதவுமாறு கேட்டிருந்தார் . சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்  சிஹாமா சியாஸ் விடுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்ட  ஜப்பான் நாட்டு  மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (11.12.2018) சம்மாந்துறைக்கு விஜயம் செய்து  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்  சிஹாமா சியாஸ் தலைமையி

கல்முனை இஸ்லாமபாத் பிரதான வீதி காபட் வீதியாக புனரமைப்பு

Image
(அகமட் எஸ். முகைடீன்) பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் முயற்சியினால் இஸ்லாமபாத் பிரதான வீதி காபட் வீதியாக புனரமைக்கப்படும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (1) சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தகர் பி.ரி ஜமால் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் 1.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதி காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.  ஹரீஸ் அவர்கள் கல்முனை மாநகர முதல்வராக இருந்தகாலப்பகுதியில் இவ்வீதி தார் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டதோடு தற்போது அவரது

கிராமிய பாலங்களை அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி! கல்முனை கிட்டங்கிப் பாலம் உள்வாங்கப்படுமா?

Image
நாடாளவிய ரீதியில் 250 கிராமிய பாலங்களை அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.  இதற்கென 52 தசம் ஒரு மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.   கடன் உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கைச்சாத்திட்டுள்ளார்.   தூர பிரதேசங்களிலுள்ள கிராமிங்களுக்கும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை வழங்கும் நோக்குடன் தேசிய வீதிப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது.   இந்த வேலைத்திட்டம் மாகாண சபைகள், சபைகள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.   இந்த நிதியிலாவது அம்பாறை மாவட்டத்திலுள்ள கிட்டங்கி பாலம் நிர்மாணிக்கப்படுமா என்ற ஆவலோடு அப்பிரதேச மக்கள் காணப்படுகின்றனர் தான் அங்கீகரித்த கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை .பிரதமர் மகிந்தராஜபக்ஸ  நிறைவேற்றுவாரா? (அரசாங்க தகவல் திணைக்களம்)

கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Image
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் கல ்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் 3400 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(19-09-2018)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியுடனும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்புடனும் இந்த வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபை பிரதேச மக்களுக்காக கொண்டவரப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் 3400 கோடி ரூபா நிதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கல்முனை ம

மருதமுனை அல் - மன்னார் மத்திய கல்லூரியில் சித்தீக் நதீர் திறந்த வெளியரங்கு திறந்து வைப்பு

Image
மருதமுனை அல் - மன்னார் மத்திய கல்லூரியில் சித்தீக் நதீர் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் ஜெமீல்  சகோதரர்களால் நிர்மாணிக்கப்பட்ட திறந்த வெளியரங்கு கல்லூரி பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது . கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் மை ஹோப் நிறுவனத்தின் தவிசாளரும் ,தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபை  நிறைவேற்றுப் பணிப்பாளருமான சித்தீக் நதீர் , சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை  சத்திர சிகிச்சை நிபுணர் சித்தீக் ஜெமீல் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும்  மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்சர்  கெளரவ அதிதியாகவும்  கலந்து கொண்டு  கட்டிடத்தை  திறந்து வைத்தனர். அத்துடன் இன்று கல்லூரியில் நடை பெற்ற ஓ.எல்  தின விழாவிலும் இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . பிரதி அதிபர் ,உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்  -- 

2017.11.21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

Image
அம்பாறை நிந்தவூர் வைத்தியசாலைகள்  அபிவிருத்தி  18. வைத்தியசாலைகளில் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் (விடய இல. 49) சாதாரண கொள்முதல் முறையினை பின்பற்றும் போது ஏற்படுகின்ற கால தாமதத்தினால் வைத்தியசாலைகளின் கட்டுமானங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எழுந்துள்ள கால தாமதத்தினை கவனத்திற் கொண்டு, அந்நிலைமையில் இருந்து மீள்வதற்காக அப்பணியினை அரச நிர்மாண நிறுவனமொன்றுக்கு ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணங்க, கராபிட்டிய, அம்பாரை, நிந்தவூர் ஆகிய வைத்தியசாலைகளில் துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானப்பணிகளை பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை பணியகம் மற்றும் பொறியியல் சேவை தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு வழங்குவதற்கும், ஹொரண அடிப்படை வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நற்பிட்டிமுனை (CEB) 2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை மாநர சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை இணை அமைப்பாளர்களில் ஒருவருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் மகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம பிரதேசங்களில் வீதிகளை அபிவிருத்தி செய்யு ம் வேலைத் திட்டத்திற்கமைய   நற்பிட்டிமுனை (CEB) 2ஆம் குறுக்கு வீதி இருபது இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

சி.எம். முபீத்தின் முயற்சியால் நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு வீதி நிர்மாணம்

Image
நற்பிட்டிமுனை ஆலயடி வடக்கு  வீதியில் வசிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவாகவும், தாகமாகவும் இருந்த ஆலயடி வடக்கு   வீதிக்கு 5 மில்லியன் ரூபா நிதியில் கொங்றீட் வீதி அமைப்பதற்கான  முதற்கட்ட வேலைத் திட்டங்கள்   நேற்று முன்தினம்  (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீதியின் அவல  நிலை குறித்து கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான நற்பிட்டிமுனை சி.எம்.முபீத் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்  விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சரினால் இந்த வீதிக்கான முதற்கட்ட நிதியாக 50இலச்சம்  ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது  கல்முனை மாநகர சபை முன்னாள்  உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளர்களின் ஒருவருமான சி.எம்.முபீத் இந்த வீதிக்கான  வேலை திட்ட்ங்களை ஆரம்பித்து வைத்தார் 

"மலரும் கிழக்கு" அம்பாறையில் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி

Image
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான    கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி  இம்முறை அம்பாறையில்  இடம்பெறவுள்ளது, மலரும் கிழக்கு எனும்  தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி  நாளை   ஞாயிற்றுக் கிழமை  ( 10 ) ஆம் திகதி  அம்பாறையில்  ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது, இந்த  கைத்தொழில் வர்த்தகக் கண்காட்சி  10,11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது, இதற்கு முன்னர்     திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது, கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  2025 ஆம் ஆண்டுக்கான அடைவு இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளது   கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் விடுத்த அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித ப

கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில்இன்று (17) வியாழக்கிழமை காலை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், வலயக்கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,மாநகர ஆணையாளர் ஜே .லியாகத் அலி ,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, சமூர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி,  உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்களத் தலைவர்கள் விளக்கமளித்தனர்.  மேலும் தனியார் நிறுவனத்தினால் கல்முனை மாநகர பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கேபில் தொலைக்கா

கல்முனை பொதுச் சந்தைக்கு பொருத்தமான இடம் தற்போதைய அமைவிடமே.

Image
(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை பொதுச் சந்தையினை வேறு இடத்தில் அமைப்பதனைவிட குறித்த சந்தையினை புணர்நிர்மாணம் செய்வதே சாலச் சிறந்ததாக காணப்படுவதாக கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்து அப்பணியினை விரைவுபடுத்தி செய்துதருமாறும் கேட்டுக்கொண்டனர்.  நகர திட்டமிடல் அமைச்சினால் கல்முனை பொதுச் சந்தையினை புணர் நிர்மாணம் செய்வதா அல்லது வேறு இடத்தில் புதிதாக அமைப்பதா என்பது தொடர்பாக கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தினரின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அறிந்து கொள்ளும்வகையிலான சந்திப்பு ஒன்றை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்தார். இதன்போதே குறித்த வர்த்தக சங்கத்தினர் மேற்கண்டவாறு வேண்டிக்கொண்டனர்.     விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனை அலுவலகத்தில் இன்று (12) சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி சந்திப்பில் மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச்

சவூதி இளவரசர் நாளை காத்தான்குடிக்கு விஜயம்

Image
(ஆர்.ஹஸன்) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் இன்று சனிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.  சவூதி இளவரசர் தலைமையிலான தூதுக்குழுவுடன் இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெ;ய்யித் மசூர் மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இதன்போது, இலங்கையின் சுற்றுலாத்துறை, நகர அபிவிருத்தி, கட்டிட நிர்மாணம் மற்றும் வீடமைப்பு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்துடனான பேச்சுக்களை எவ்வாறு மேற்கொள்ளவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன.  இதேவேளை, நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சவூதி தூதுக

காத்தான்குடி கடற்கரை வீதி திறந்து வைப்பு

Image
(ஆர்.ஹஸன்) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்)  நேற்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற வீதி திறப்பு விழாவில், இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.  காத்தான்குடி கடற்கரை வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்கமைய 2.8 கிலோ மீற்றர் தூரம் காபட் இடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள சிறயளவு தூரத்தையும் காபட் இடுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்