மருதமுனை அல் - மன்னார் மத்திய கல்லூரியில் சித்தீக் நதீர் திறந்த வெளியரங்கு திறந்து வைப்பு


மருதமுனை அல் - மன்னார் மத்திய கல்லூரியில் சித்தீக் நதீர் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் ஜெமீல்  சகோதரர்களால் நிர்மாணிக்கப்பட்ட திறந்த வெளியரங்கு கல்லூரி பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது .

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில் மை ஹோப் நிறுவனத்தின் தவிசாளரும் ,தேசிய தொழில் பயிற்சி அதிகாரசபை  நிறைவேற்றுப் பணிப்பாளருமான சித்தீக் நதீர் , சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை  சத்திர சிகிச்சை நிபுணர் சித்தீக் ஜெமீல் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும்  மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்சர்  கெளரவ அதிதியாகவும்  கலந்து கொண்டு  கட்டிடத்தை  திறந்து வைத்தனர்.

அத்துடன் இன்று கல்லூரியில் நடை பெற்ற ஓ.எல்  தின விழாவிலும் இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . பிரதி அதிபர் ,உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் 







-- 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று