அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து (24) தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதனால் பெரும்போக நெல் அறுவடை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருவதனால் மாவட்டத்தின் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தற்போது வரை 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் பெரும்போக அறுவடையில் பெருந்தடங்கல் ஏற்பட்டுள்ளதோடு மழை தொடரின் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பாலமுனை நிந்நவூர் சம்மாந்துறை இறக்காமம், சடயந்தலாவ சவளக்கடை நற்பிட்டிமுனை பிரதேச விவசாயிகள் மழைத்தாக்கத்தால் அறுவடைத்தாமதத்தையும்.நஷ்டத்தையும் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போகம் மாத்திரமல்ல கடந்தாண்டுகளில் கூட அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்தும் இந்நிலை ஏற்பட்டு வருவதை நாம் காணுகிறோம். பல கண்டங்களில் அறுவடையும் குறைந்து நெல்லின்விலையும் குறைந்துள்ள நிலையில்...