தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கான புதிய உவேந்தரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோராமல் உபவேந்தர்; எம்.எம்.எம்.நாஜிம் காலத்தைக் கடத்துகின்றார்.


 தெ.கி.ப.கழக ஆசிரியர் சங்கத்தலைவர் எம்.ஏ.அப்துல் ஜப்பார்; குற்றச்சாட்டு 

(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸில்)

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான புதிய உவேந்தரை நியமிப்பதற்கு பத்திரிகை வாயிலாக விண்ணப்பம் கோராமல் தான் மீண்டும் உபவேந்தராக நியமனம் பெற்று அதன் நன்மைகளை தொடர்சியாக அனுபவிபதற்கு உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் திட்டமிட்டுள்ளார் என தென்கிழக்குப் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தின் தலைவரும்,முன்ளாள் பீடாதிபதியும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(06-02-2018) தென்கிழக்குப் பல்கலைக்கழ வளாகத்தில் நடைபெற்றது இதன்போதே அவர் இந்த குற்றச் சாட்டைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் தெரிவித்தாவது:-பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் 14ஃ2016 சுற்று நிருபத்திற்கிணங்க தென்கிழக்கு பல்கலைக்கழகம் உபவேந்தர் பதவினை பத்திரிகைகள் வாயிலாக அழைத்திருக்க வேண்டும்.

மேலும் தேடுதல் குழுவையும் மதிப்பீட்டு குழுவையும் பல்கலைக்கழக மூதவை நியமித்திருக்க வேண்டும்.மேலும் மூதவையின் செயலாளர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கண்பானிபாளரையும் நியமிப்பதற்கான கடிதத்தினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருக்க வேண்டும்.ஆனால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வேண்டும்மென்றே இந்த விண்ணப்பம் கோருவதற்கான கோவையினை மூதவையில் இடுவதற்கு தவறியுள்ளார் என்பதே உண்மையாகும்;.

இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் ஆறு தொடக்கம் எட்டு மாதங்களுக்கு முன்னரே இப்பதிவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.  இவ்வாறான நடைமுறையே இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்திலும் இடம்பெற்று வந்துள்ளது.கடந்த காலங்களில் 2002 டிசம்பர் மாததில் 2003 ஜுன் மாதத்திற்கான நியமனத்தின் விளம்பரமும்இ 2005 டிசம்பர் மாதத்தில் 2006 ஜுன் மாதத்திற்கான விளம்பரமும்இ 2008 டிசம்பரில் 2009 ஜுன் மாதத்தின் நியமனத்திற்கான விளம்பரமும்இ2012 ஜனவரியில் 2012 ஜுன் மாத நியமனத்திற்கான விளம்பரமும்இ2015 ஜனவரி மாதத்தில் 2015 ஜுன் மாத்திற்கான நியமன விளம்பரமும் பத்திரிகைகளில் காணப்பட்டது.   

இது தொடர்பாக நாங்கள் அறிய வருவது என்னவெனில் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அதாவது இப்போதுள்ள உபவேந்தர் வேண்டும் என்றே தான் மீண்டும் உபவேந்தராக நியமனம் பெற்று அதன் நன்மைகளை தொடர்சியாக அனுபவிபதற்கு திட்டமிட்டுள்ளார்.இந்ந போக்கிற்கு கடந்த 27.01.2018ல் இடம்பெற்ற 208வது மூதவையில் அவர் நடந்துகொண்டவிதம் இதற்கு சான்றாகும்.இங்கு நாங்கள் உறுதியாக கூறுவது தற்போதைய உபவேந்தர் எதிர்கால உபவேந்தர் பதவிக்கான விண்ப்பதாரியாக இருக்கின்ற சமயத்தில் இவர் எவ்வாறு அப்பதவிக்கான விளம்பரப்படுத்தலிலும் முதவையினால் நடாத்தப்பட இருக்கின்ற தேர்தல் திகதியிலும் செல்வாக்கு செலுத்துவார் என்பதே ஆகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கம் தனது 2018-01-25ஆம்; திகதி இடப்;பட்ட கடிதத்திலும்; மூதவையின் செயலாளருக்கு அனுப்;பிய கடித்திலும்; உபவேந்தருக்கான பதவியை விளம்பரப்பபடுத்துவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்குமாறும் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு போகப்வோதாக அறிவித்தது.ஆயினும் பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்துவற்கு தவறிவிட்டது.  மேலும் 2018-01-27ஆம் திகதி இடம்பெற்ற மூதவையில் உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக கேட்;ட போது உபவேந்தர் தான் பெப்ரவரி மாதத்தில் விளம்பரபடுத்தி மே மாதமே தான் அதற்கான தேர்தலை வைக்கபோவதாக கூறிவிட்டு முதைவையினை அவாரால் நடத்தமுடியவில்லை அதனை முடித்துவி;ட்டார்.

இதனால் தென்கிழக்கு ஆசிரியர் சங்கம் தனது விசேட பொதுக்கூட்டத்தினை கூட்டியது.  அக்கூட்டத்தில் மூதவை உறுப்பினர்களுக்கு தாங்கள் ஒரு வேண்டுகோளினை இடைநிறுத்தபட்ட கூட்டத்தினை கூட்டுவதற்காக வழங்குவதுடன் பத்திரிகை மகாநாடு ஒன்றினை கூட்டுவதாகவும் ஏகமனதாக முடிவெடுக்கப்ட்டது.நாங்கள் ஒரு கல்வி சமூகத்தினர் என்றவகையில் இப்போது நாங்கள் பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தவிசாளரும் தற்வோதைய உபவேந்தரினால் பிளையாக வழிநடாத்தபட்டுள்ளாரா என சந்தேகம் எங்களுக்குள்ளேயே எழுந்துள்ளது.இதனை நாங்கள் பல்கலைகழக மானிய ஆணைக்குழுவுடன் உறுதிபடுத்த வேண்டியுள்ளது.

இந்த உபவேந்தர் நியமிக்கபட்டதன் பிற்பாடு தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மிகவும் அதிகமாக குறைவடைந்துள்ளது.  அதாவது 2015ம் ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு ருபா 772 மில்லியன்களாக காணபட்டது தற்போது ருபா 300 மில்லியன்களாக குறைவடைந்துள்ளது.  இதற்கான காரணம் இவரின் காலப்பகுதியில் சரியான நிதி முகாமைத்துவம் இல்லாததே ஆகும்.  இவரினால் புதிய திட்டங்கள் அடையாளம் காணமுடியாததுடன் இவரினால் பல்கலைகழக அபிவிருத்திகளில் கவனம் செலுத்தாமையே காரணமாகும்.

உபவேந்தர் நாஜிம் குவைற் திட்டத்திற்கான முன்மொழிவை சரியாக கையாளதினால்  தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு வரவிருத்த நிதி கிடைக்காமல் வேறு பல்கலைகழகத்திற்கு சென்றது.இந்த உபவேந்தரின் நடத்தையினால் தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு நிலயத்தின் இயக்குனர் பேராசிரியர் கன்சியா றஉப் தனது பதவியினை இராஜினமா செய்துள்ளர்.முகாமைத்து குழுவே இந்த நிலயத்தினை நிர்வகிக்கின்றது.இதற்கான தவிசாளர் இந்த உபவேந்தராவார்.நிதிரீதியான வேலைகளை முடிப்பதாயின் இக்குழுவின் அனுமதியினை பெறுதல் அவசியமாகும்.

ஆனால் இவ் உபவேந்தர் பல வழிகளிலும் முகாமைத்துவ கூட்டத்தினை கூட்டுவதற்கு கேட்கப்பட்ட போதும் உபவேந்தர் நேரம் கொடுக்கவில்லை. மேலும் இவ்உபவேந்தர் எந்த வகையான தொடர்பாடலுக்கும் பதில் கொடுக்கவில்லை.  இயக்குனர் 2018-01-23ஆம் திகதி  அன்று நடைபெற்ற செனற் சபையில் வெளிவாரி பட்டப்படிப்பு தொடர்பான விடயம் வருகின்றபோதும் இயக்குனர் இப்பிரச்சினையை சொல்லுகின்ற போதும் உபவேந்தர் பேராசிரியர் கன்சியா றஊப்பை அவமதிக்குமளவுக்கு பேசிஉள்ளார். இதனால் இவர் தனது பதவியினை இராஜினமா செய்துள்ளார் என்றும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.அப்துல் ஜப்பார் மேலும் தெரிவித்தார்.  

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்