சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெற்றது. இதற்கமைவாக புதிதாக 6 அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்கள் மூன்று பேரும், பிரதியமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரதமர்; ரணில் விக்ரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதமர் இந்த பதவிப் பொறுப்பை குறுகிய காலத்திற்காக மாத்திரமே பொறுப்பேற்றுள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோ - அடிப்படை வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கபீர் ஹாஷிம் - உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

சாகல ரத்னாயக்க - இளைஞர் அலுவல்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல - அரச தொழில்துறை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ரவீந்திர சமரவீர - வனவிலங்கு, நிலைபேறான அபிவிருத்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பியசேன கமகே, இளைஞர் அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், அஜித் பி பெரேரா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக விடயங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சராகவும், ஹர்ஷ டி சில்வா தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சராக ஜே.சி.அலவத்துவல சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில அமைச்சுகளின் பொறுப்புக்கள் தொடர்பில் மறுசீரமைப்புக்கு உட்படுத்தி மிகவும் பொருத்தமான நிறுவனங்களாக தரமுயர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.   


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று