காலத்திற்கேற்ற நவீன அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுவது அவசியமாகும்
முஸ்லிம் கவுன்சில் கருத்தரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன சிறுபான்மைச் சமூகங்களது நலன்களையும் உள்வாங்கி நவீன அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். தென் ஆபிரிக்கா , கென்யா , நேபாளம் , கிழக்கு டிமோர் ஆகிய நாடுகளில் பன்மைத்தன்மை பேணுதல் , சமூகநீதி , சமத்துவம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இந்த அரசியலமைப்புத் திட்டம் தயாரிக்கப்படும். முஸ்லிம் இயக்கங்களின் கட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்பாடுகள் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது , அரசியல் யாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு குழுக்களும் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. அடுத்த இரு வாரத்திற்குள் இவை மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். வழி காட்டல்குழு பிரதமர் தலைமையில் செயற்பட்டு வருகின்றது. சகல கட...