உணவுக் கால்வாயில் மாட்டிக் கொண்ட பூட்டூசி! சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு .எம்.சமீம் மற்றுமொரு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார்!!

யு.எம்.இஸ்ஹாக் 



உணவுக் கால்வாயில் மாட்டிக் கொண்ட  பூட்டூசி சத்திர சிகிச்சை இன்றி அகற்றப் பட்ட சம்பவம் ஒன்று  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்   வசதிகள் குறைந்த சம்மாந்துறை வைத்திய சாலையில் மற்றுமொரு பர பரப்பை  ஏற்படுத்தியுள்ளார்  இந்த சம்பவத்தை மக்கள் பாராட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது  சம்மாந்துறையை சேர்ந்த  43 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக  வீட்டில்  இரவு நேரத்தில்  பெனடோல்  மாத்திரை  சாப்பிடுவதற்கு  முற்பட்டு  மேசையில் இருந்த  மாத்திரையை  விழுங்கி விட்டு  உறங்கி உள்ளார் . 

இரண்டு நாட்களின் பின்னர்  குறித்த நபருக்கு  வயிற்று உபாதை ஏற்பட்டு  சாப்பிட முடியாமல்  வாந்தி வரத்தொடங்கியுள்ளது. அதன் பின்னர் குறித்த பெண் சம்மாந்துறை  அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு  சிகிச்சை பெற்ற  போது  இவரை  பரிசோதித்த  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்  இவரது உணவுக்கால்வாயில் ஒரு திண்மப் பொருள் ஒட்டிக் கொண்டிருப்பதையும் இதன் காரணமாகவே  இவருக்கு வயிற்று உபாதை ஏற்படுவதையும் உறுதி படுத்தியதன்  பின்னர் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் .

ஆனால் நோயாளிக்கு  உபாதை அதிகரிக்கும் நிலையை அறிந்த  சத்திர சிகிச்சை நிபுணர்   நோயாளியை  தனது பூரண கட்டுப் பாட்டுக்குள் எடுத்து எக்ஸ் றே , மற்றும் ஸ்கேன்  செய்து பார்த்த போது  முஸ்லீம் பெண்கள் அணிகின்ற ஹிஜாப்  ஆடைக்கு  பாவிக்கின்ற  ஊசி உணவுக்கால்வாயில் சிக்கிக் கொண்டு இருப்பதையும் அவ்விடத்தில் கிருமி தோற்று உண்டாகி இருப்பதையும் உறுதிப் படுத்தினார் .

உணவுக்  குழாயில் வசமாக சிக்கிக் கொண்டிருந்த அந்த ஊசியை எடுப்பதாக  இருந்தால் பாரிய சத்திர சிகிச்சை செய்தே அகற்ற வேண்டும் . எனினும் சத்திர சிகிச்சை செய்யாமல்  தான் சிங்கப்பூரில் பெற்ற  பயிற்சியையும்  மேலும் சில உபகரணங்களையும் பயன்படுத்தி  மிகவும்  நுட்பமாக அந்த ஊசியை அகற்றியுள்ளனர் .
அந்த ஊசி  பெனடோல் மாத்திரை வடிவில்  இருந்தமையினால்  அவதானமில்லாமல்  பாவிக்கப் பட்டுள்ளது . இவ்வாறான விடயங்களில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் . மாத்திரைகளை குறிப்பிட்ட இடங்களில் வைக்க வேண்டும் . நடந்துள்ள இந்த சம்பவமானது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்காயான  விடயம் என்பதுடன்  அவதானாக் குறைவு  காரணமாக பாரிய சத்திர சிகிச்சை  செய்ய வேண்டிய சம்பவம்  இறைவன் உதவியுடன்  இலகுவாக முடிவடைந்துள்ளது என்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்  வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம்  தெரிவித்தார் .

இந்த சம்பவம் தொடர்பாக  பலர்  வைத்தியசாலை நிருவாகத்தையும் ,சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. வைத்தியசாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள்யு .எம்.சமீம் அவர்களையும் பாராட்டியுள்ளனர். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்