கல்முனை வலயக் கல்வி அலுவலக சமாதானக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த வலய சமாதான தின விழா




உலக சமாதான தினத்தைக் கொண்டாடும் முகமாக கல்முனை வலயக் கல்வி அலுவலக சமாதானக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த வலய சமாதான தின விழா   திங்கட் கிழமை (17) நிந்தவூர் அல் -மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் நடை பெற்றது. 


கல்முனை கல்வி வலயத்துக்கான இன நல்லிணக்க மற்றும் சமாதான கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.ரஸீன்  வழி காட்டலுடன்   கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் 

 கிழக்குமாகாண கல்வித் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 


நிகழ்வில்  பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான  எஸ்.எல்.ஏ.றஹீம்., பீ.எம்.வை.அரபாத் ,திருமதி .ஜிஹானா அலிஹ்ப்  ஆகியோரும் ,கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்ஷர் , கோட்டக் கல்விப்  பணிப்பளர்களான எஸ்/எல்.எம்.சலீம் ,பீ.கே.கந்தசாமி ,ஏ.எல்.சக்காப் ,திருமதி .ஆர்.திரவியராஜா  ஆகியோரும்  உதவிக்கு கல்விப் பணிப்பாளர்களான  கே.வரதராஜன்,எம்.எம்.கலீல்.ஏ.ஏ.சத்தார் ,ஏ.எல்.எம்.ஜஹாங்கீர்  உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் , கல்முனை வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளின்  அதிபர்கள் ,மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர் .

சமாதானத்தை வலியுறுத்திய  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்  பாடல்கள் , கவிதைகள் , நாட்டியம்  என்பன  நிகழ்வை அலங்கரித்தது.

கிழக்குமாகாண  கல்வி திணைக்களத்தின் ஊடாக  சமாதானத்தை ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில்  முன்னெடுத்து  அதில்  பல கோணங்களிலும்  வெற்றி கண்டு  கிழக்கின் கல்வித்துறையை   முன்னேற்றி வருகின்ற  கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் இன நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கான விருதும் ,தங்கப் பதக்கமும் வழங்கி கெளரவிக்கப் பட்டார் .

































Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி