முஸ்லிம் தலைமைத்துவங்களுடைய மௌனமும்! தமிழ் தலைமைத்துவங்களுடைய மிரட்டலும் !!
யுத்தம் காரணமாக கடுமையான அழிவுகளுக்கு முகம் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான நீதியான தீர்வு எட்டப் படவேண்டும். அந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதே வேளை முஸ்லிம் தலைமைத்துவங்களுடைய மௌனமும் தமிழ் தலைமைத்துவங்கள் தங்களுடைய உரிமையைக் கேட்கின்ற போது ஒரு வகையிலான மிரட்டல் பாணியில் வடக்கும் கிழக்கும் இணைக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுவதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. என்று தேசிய ஜனநாயக மக்கள் கூட்டணியின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவதில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அரசின் தீர்வானது நேரடியாக யுத்தத்தில் பங்குபற்றிய தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமென சம கால தமிழ் அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளுக்கு பதில் கூறும் வகையிலும் இந்த விடயங்களில் முஸ்லிம் தலைமைகளின் மௌனம் முஸ்லிம் சமுகத்துக்கு பாதிப்பபை ஏற்படுத்தும் என்பதை தெளிவு படுத்தும் வகையிலும்; ஊடகவியலாளர்களுக...