பிரதி அமைச்சர் ஹரீஸ் இனம்,மதம் பார்க்கவில்லை திறமைக்கு மதிப்பளித்தார்

(அகமட் எஸ்முகைடீன்ஹாசீப் யாசீன்யு.எம்.இஸ்ஹாக் )

கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் 'தரச் சித்தியினைப்பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று(20) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சுவேந்திர ராஜா தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்றோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இம்மடிகணினியை வழங்கி வைத்தார்

இந்நிகழ்வில் கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.அப்துல் றஹீம்மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்டசட்டத்தரணி .எம்.நசீல்செயலாளர் சட்டத்தரணி எம்.சுல்பிபிரதிஅமைச்சரின்  இணைப்புச்   செயலாளர் நௌபர் பாவாகார்மேல்பற்றிமா கல்லூரி பிரதி அதிபர்கள்,   ஆசிரியர்கள்மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

சாதனையாளரான மாணவன் மயில்வாகனம் சாறுஜனை பாராட்டிகொளரவிப்பதன் மூலம் குறித்த மாணவனை இன்னும் பலசாதனைகளை புரிவதற்கு தூண்டுதலாக அமைவதோடு ஏனையமாணவர்களையும் சாதனையாளர்களாக மாறுவதற்கு வழிவகுக்கும்வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தானாகமுன்வந்து குறிந்த மாணவனுக்கு மடிகணினி வழங்கி வைத்தார்.

இதன்போது சாதனை மாணவன் உரையாற்றுகையில்வெற்றிக்குபங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு தன்னைபாராட்டி கௌரவித்து தனது மேற்படிப்பினை சிறந்த முறையில்முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக மடி கணினியினை வழங்கிவைத்த மெஸ்றோ அமைப்புக்கும் அதன் ஸ்தாபகத் தலைவரும்,விளையாட்டுத்துறை பிரிதி அமைச்சருமான ஹரீஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்ததோடு அவரின் பணிகள் தொடரவாழ்த்துக்களையும் தெரிவித்தார்



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று