தாய்க்கும் மக்களுக்கும் கல்முனையில் மரண தண்டனை
கொலைக் குற்றம் புரிந்த தாய் ஒருவருக்கும் இரண்டு மகன்மாருக்கும் இன்று கல்முனை மேல் நீதி மண்றில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த மூவருக்கே இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது. கல்முனை மேல் நீதி மன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்கவினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப் பட்டன.
கடந்த 201.04.05 அன்று ஒலுவிலில் வைத்து 26 வயதான எஸ்.ரீ.முகம்மது சாஹிர் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தவர்கள் என்ற குற்றச் சாட்டில் ஒலுவிலைச் சேர்ந்த யூ.எல்.செமிலத்தும்மாஇஏ.எல்.முகம்மது பைஸால்இஏ.எல்.இப்றாஹீம்( றிபான்) என்ற தாய்க்கும் இரண்டு மகன்கன்மார் ஆகியோருக்கு கல்முனை மேல் நீதி மன்றில் நீதிபதி வீ.சந்திர மணி அவர்களால் 20.07.2010 அன்று மரண தன்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது.
குற்வாளிகள் அந்த தீர்ப்பை எதிராக மேல் நீதி மன்றில் மேன் மறையீடு செய்தமையினால் தீர்ப்பில் இருந்த வழுக்கள் ஆராயப்பட்டு மீண்டும் இன்று கல்முனை மேல் நீதி மன்றில் விசாரணைக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் எடுக்கப் பட்டபோது மூவரும் கொலையாளிகள் என தீர்ப்பு வழங்கி மூவருக்கும் மரண தன்டனை வழங்கப் பட்டுள்ளது.
இவ்வழக்கில் கொல்லப்பட்டவர் சார்பில் அரச தரப்பு சட்டத் தரணிகளான எம்.ஏ.எம்.லத்தீப்இ நுஸ்லி லத்தீப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment