ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

(அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்)


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய  சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (20) செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

அல்-அஸ்ஹர் வித்தியாலய  அதிபர் .எச்.அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் .எல்.சகாப், அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் . பாவா, கே.எம்.தௌபீக், .எம்.றினோஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பறகதுல்லாஹ், கல்முனைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பதக்கங்கள் அணிவித்து பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு குறித்த பரீட்சையில் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதேவேளை கோட்ட, வலய, மகாண மட்டங்களில் நடைபெற்ற புறக்கீர்த்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஆகியோரின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்துப்பாவும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும்வகையில் மேலதிக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியை .ஆர்.எஸ்.ஹசீனாவின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துப்பா வழங்கப்பட்டது.

இதன்போது அரங்கேறிய மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது இங்குகுறிப்பிடத்தக்கதாகும்.  





Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்