கொரிய நாட்டு வைத்தியர்கள் கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை -வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் ஆளுமை
கொரிய நாட்டு வைத்தியர்கள் கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை -வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் ஆளுமை
கொரிய நாட்டைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்களால் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் இலவச கண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகள் நடாத்தப் பட்டு வருகின்றன.
கொரிய நாட்டு சூன் சுன்ஹயங் பல்கலைக் கழக வைத்தியசாலை கொன் குளோபல் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து இலவச வைத்திய சேவைக்கு இலங்கை வந்துள்ள 10பேர் அடங்கிய சத்திர சிகிச்சை நிபுணத்துவக் குழு வைத்தியர்கள் கல்முனை ஆதார வைத்திய சாலையில் தங்கியிருந்து நேற்றும் (28) இன்றும் (29) நாளையும்(30) இந்த இலவச மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.
சுகாதார அமைச்சின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர்களும், பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர்களும் இக்குழுவில் அடங்கியுள்ளனர். சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி. பைஸல் காஸிம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைய இவ் வைத்தியர் குழு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற் கொண்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நேற்று இந்த இலவச வைத்திய முகாம் ஆரம்பித்து வைக்கப் பட்டது. ஆரம்ப வைபவத்தில் வைத்திய சாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்தேற்றல் நிபுணர் உட்பட மற்றும் வைத்தியர்களும் தாதியர்களும் ,அதிகாரிகளும் சிகிச்சை பெற வந்த நோயாளர் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
நேற்றும் இன்றும் 500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டதாகவும் இதில் பலருக்கு இலவச சத்திர சிகிச்சை இடம் பெறவுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்
Comments
Post a Comment