Posts

Showing posts from August, 2016

நட்பிட்டிமுனையில் அமைச்சர் றிஷாத் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

Image
நட்பிட்டிமுனை  அல் - கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின்  ஏற்பாட்டில்   நாளை வியாழக் கிழமை  தையல்  பயிற்சி  நிலையம்  திறந்து வைக்கப் படவுள்ளது. கல்முனை மாநகர சபை முன்னாள்  மாநகர சபை உறுப்பினர்  சி.எம்.முபீத்  தலைமையில் நடை பெறவுள்ள  திறப்பு  விழா நிகழ்வில்  வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 

கல்முனையில் வேலையற்ற இளஞர்களுக்கு தொழில் வழி காட்டல் பயிற்சி

Image
வாழ்வின் எழுச்சி  திணைக்களத்தினால்  இவ்வாண்டு முன்னெடுக்கப் படும்  வாழ்வாதார  செயற்றிடத்தின் கீழ்  திவிநெகும  பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த வேலையற்றிருக்கும்  இளைஞர்களுக்கான  தொழில் வழி காட்டல்  பயிற்சி வழங்கப் படவுள்ளது . இந்தப்  பயிற்சி நெறி  ஹை டெக்  லங்கா  நிறுவனத்தினால்  வழங்கப் படவுள்ளது.  இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட  கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  30 இளைஞர்கள்   ஹை டெக்  லங்கா  நிறுவனத்திற்கு அனுப்பி  வைக்கப் பட்டனர்  தொழில் பயிற்சிக்கு  செல்லும் இளைஞர்களை  வழி  அனுப்பி வைக்கும்  நிகழ்வு  கல்முனை பிரதேச செயலகத்தில்  திவிநெகும தலமைப் பீட முகாமைத்துவ  பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம் பெற்ற  போது  பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி  பிரதம அதிதியாகவும்  மற்றும்  திவிநெகும  அதிகாரிகளும்   ஹை டெக்  லங்கா  நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட ...

அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன

Image
மூன்றாம் தவணைக்காக அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இவ்வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதியுடன் நிவைறையவுள்ளது.   இதேவேளை க. பொ. த உயர் தர  பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகின. இந்த நடவடிக்கைள மூன்று கட்டங்களின் கீழ் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.என். ஐ.ஐயந்தபுஷ்பகுமார தெரிவித்தார். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் நடவடிக்கையும் இன்று ஆரம்பமானது.   தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு!அம்பாறை மாவட்ட இலக்கிய முன்னோடிகளின் கருத்துக்கள்

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் இவ்வருடம் டிசம்பர் மாதம் நடாத்தவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக மாவட்டம் தோறும் முஸ்லிம் இலக்கிய முன்னோடிகளின் கருத்துக்கள் ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் முதலாவத சந்திப்பு அம்பாறை மாவட்ட இலக்கிய ஆர்வலர்களுடன் நடை பெற்றது. உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கவிஞர் சோலைக் கிளி தலைமையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்  வெள்ளிக்கிழமை (26.08.2016 )நடை பெற்றது. இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் ஜின்னா சரிபுத்தீன், செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இச்சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பாக கருத்துக்’கள் தெரிவித்தளனர். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு டிசம்பர் மாதம் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிஸாத் பதியூதீன் தலைமையில் நடை பெறவுள்ளது. முஸ்லிம் படைப்பாளிகளால்...

சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்களுக்கு சான்றிதழ்

Image
கல்முனை பிரதேச செயலக பிரதேச மட்டத்திலான சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல்- பஹ்ரியா  மகா வித்தியாலய மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்  நடை பெற்றது. வித்தியாலய அதிபர்  ஏ.ரஸாக்  தலைமையில் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில்    பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி   பிரதம அதிதியாகவும்  ,  திவி நெகும தலமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் ,  சமூக அபிவிருத்தி மன்ற அதிகாரி என்.எம்.நவுசாத் , பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.றபாய்தீன்   உட்பட அதிதிகள்  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்குகின்றனர்  . நிகழ்வில்  கல்லூரி ஆசிரியர்கள்  மாணவர்கள் கலந்து கொண்டனர் .  

நிதி மோசடி செய்த ஒன்பது அதிகாரிகள் தொழிலை இழந்துள்ளனர்

Image
திவிநெகும  திணைக்களத்தில்  நிதி மோசடி செய்த  ஒன்பது அதிகாரிகள்  தொழிலை  இழந்துள்ளனர் .இந்த  சம்பவம்  நாவிதன்வெளி  பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்  நாவிதன்வெளி  பிரதேச  சமுர்த்தி பயனாளிகளுக்கு   வழங்கப் பட்ட  கடன்  தொடர்பில்  நிதி மோசடி செய்ததாக  குற்றம் சாட்டப்  பட்ட திவிநெகும  வங்கி முகாமையாளர் 03 பேரும்  திவிநெகும  உத்தியோகத்தர்கள் 6 பேரும்  பதவி  நீக்கம்  செய்யப் பட்டுள்ளனர். இடை நிறுத்தப் பட்டு  விசாரணை செய்யப் பட்டுவந்த  குறித்த ஒன்பது பேருக்கும்  எதிரான தீர்ப்பு  நேற்று வழங்கப் பட்டு  அம்பாறை மாவடட செயலக  திவிநெகும ஆணையாளரின் உத்தரவுக்கமைய   இந்த  பதவி  நிறுத்தம் செய்யப் பட்டுள்ளதாக  திவிநெகும அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 

கல்முனை மாநகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை

Image
கல்முனை மாநகரத்தில்  கட்டாக்காலி  நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை வேளை  கூடுதலான வாகன விபத்துக்கள்  ஏற்படுவதுடன் மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றன . கல்முனை மாநகர சபை இந்தக் கட்டாக்காலி நாய்களை கட்டுப் படுத்துமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர் 

கல்முனை அல் பஹ்ரியா மாணவனுக்குப் பாராட்டு

Image
கிழக்கு  மாகாண  மட்டத்தில் நடை பெற்ற  விளையாட்டுப் போட்டியில்  5000  மீட்டர்  ஓட்டப்   போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை அல் - பஹ்ரியா மகாவித்தியாலய மாணவன்  கல்முனை பிரதேச செயலக   திவிநெகும சமூக அபிவிருத்தி மன்றத்தினால்  பாராட்டி கெளரவிக்கப்  பட்டார். இந்த பாராட்டு நிகழ்வு  கல்லூரி அதிபர்  ஏ.ரஸாக்  தலைமையில்  இன்று  (23)  காலை பாடசாலைக் காலை ஆராதனை  ஒன்று  கூடலில்  நடை பெற்ற   போது  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி,விஷேட அதிதியாகவும்   கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட  முகாமையாளர்   ஏ.ஆர்.எம்.சாலிஹ்,  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர்  எஸ்.எம்.றபாயுதீன் ,  திவிநெகும சமூக அபிவிருத்தி மன்ற  உத்தியோகத்தர்  என்.எம்.நௌசாத்  ஆகியோர்   கலந்து கொண்டு  சிறப்பித்தனர் .

கல்முனையில் அளவை நிறுவை உபகரணங்கள் பரிசீலனை

Image
ஏ.பி.எம் அஸ்ஹர் 2016-2017ஆம் ஆண்டிற்கான நிறுக்கும் மற்றும் அளக்கும் உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடும் நிகழ்வு இன்று  கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது. எதிர் வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை முத்திரையிடும் நிகழ்வு  இடம் பெறவுள்ளது.காலை 9.00மணி.தொடக்கம் பிற்பகல் 3.00மணி வரை நடை பெறவுள்ள இந்நடவடிக்கையில் கலந்து கொண்டு தமது அளவை நிறுவை உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிட்டுக்கொள்ளுமாறு கல்முனை பிரதேச வியாபாரிகள் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை நீலாவணை நியுஸ்டார் விளையாட்டு கழகத்தின் 10 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

Image
(  அப்துல் அஸீஸ்) அம்பாறை நீலாவணை  நியுஸ்டார் விளையாட்டு கழகத்தி ன் 10 வது ஆண்டு  நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் களுதாவளை கெனடி விளையாட்டு கழகம் வெற்றிஈட்டியது. 41 அணியினர் கலந்துகொண்ட இந்த சுற்றுப்போட்டித் தொடரின்  இறுதிப்போட்டி நேற்று(21) அம்பாறை  நீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு களுதா வளை  கெனடி விளையாட்டு கழகமும், மட்டக்களப்பு  மண்டூர் அருள்மணி விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன இதில் 9விக்கட்டுக்களால் களுதாவளை  கெ னடி விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணியினருக்கு 7அடி உயரமுடைய வெற்றிக்கிண்ணத்தினை அதன் தலைவர் பா.பவித்திரன், செயலாளர் பா.சுரேஷ், பொருளாளர் ச. கண்ணன் ஆகியோர்கள் இணைந்து   களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்தின்  தலைவர்  த . நீலாம்பரன்னிடம் வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.

கிராம உத்தியோகத்தர்கள் போட்டிப் பரீட்சை அடுத்த மாதம் 3ஆம் திகதி

Image
கிராம உத்தியோகத்தர்கள் தரம் மூன்றிற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார் தெரிவித்தார். இம்மாதம் 29 ஆம் திகதி வரை பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதோர் உடனடியாக திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளார்கள். பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் பரீட்சார்த்திகளுக்கு தொடர்புகொள்ளலாம்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் குருதிக் கொடையாளர்கள் கெளரவிப்பு

Image
மற்றவர்களின் உயிரைக் காக்க தன் உதிரத்தை தானமாக வழங்கும்  இரத்த தான கொடையாளர்களை கௌரவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் முதல் தடைவையாக அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து இரத்த தானம் வழங்கும் குருதிக் கொடையாளர்கள் 100க்கும் மேற் பட்டோர் கௌரவிக்கப் பட்டனர். கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்.என்.ரமேஸ் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூட மண்டபத்தில் சமீபத்தில்  இவ்வைபவம் இடம் பெற்றது. கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன்,  அம்பாறை பிராந்திய இரத்த வங்கி முகாமையாளர் டாக்டர் .குமாரி அபேசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு குருதிக் கொடையாளர்களை கௌரவித்தனர். 

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்தான முகாம்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் )  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த இரத்தான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(21-08-2016)மருதமுனை மசூர் மொளலானா வீதியில் உள்ள அதன் அலுவலகத்தில்; நடைபெற்றது.ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை உறுப்பினர்கள் அணுசரணை வழங்கினார்கள். கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர் எஸ்.ரமேஸ் தலைமையில் டொக்டர் எம்.எஸ்.நஸ்ரின் ஜஹான் மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.இந்த இரத்ததான நிகழ்வில் பெண்கள் உட்பட 112பேர் இரத்ததானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.