சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல் -பஹ்ரியா மாணவர்களுக்கு சான்றிதழ்
கல்முனை பிரதேச செயலக பிரதேச மட்டத்திலான சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலய மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றது.
வித்தியாலய அதிபர் ஏ.ரஸாக் தலைமையில் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி பிரதம அதிதியாகவும் , திவி நெகும தலமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் , சமூக அபிவிருத்தி மன்ற அதிகாரி என்.எம்.நவுசாத் , பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.றபாய்தீன் உட்பட அதிதிகள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகின்றனர் .நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
Comments
Post a Comment