அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன
மூன்றாம் தவணைக்காக அரசாங்க பாடசாலைகள் எதிர்வரும் 31ஆம் ஆரம்பமாகுகின்றன. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இவ்வருடம் டிசம்பர் மாதம் 2ஆம் திகதியுடன் நிவைறையவுள்ளது.
இதேவேளை க. பொ. த உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகின. இந்த நடவடிக்கைள மூன்று கட்டங்களின் கீழ் நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.என். ஐ.ஐயந்தபுஷ்பகுமார தெரிவித்தார். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் நடவடிக்கையும் இன்று ஆரம்பமானது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments
Post a Comment