ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்தான முகாம்
(பி.எம்.எம்.ஏ.காதர்,யு.எம்.இஸ்ஹாக் )
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த இரத்தான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(21-08-2016)மருதமுனை மசூர் மொளலானா வீதியில் உள்ள அதன் அலுவலகத்தில்; நடைபெற்றது.ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை உறுப்பினர்கள் அணுசரணை வழங்கினார்கள். கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர் எஸ்.ரமேஸ் தலைமையில் டொக்டர் எம்.எஸ்.நஸ்ரின் ஜஹான் மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.இந்த இரத்ததான நிகழ்வில் பெண்கள் உட்பட 112பேர் இரத்ததானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment