Posts

Showing posts from February, 2015
Image
 (அப்துல் அஸீஸ்  ) கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற மற்றும் இடம்மாறி ச்  சென்றோர்களை கெள ரவிக்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளுடனான   உத்தியோகத்தர் கள் ஒன்றுகூடலும் இன்று ( 26 ) அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது. இதில்  பிரதேச செயலாளர்,  திவிநெகும மாவட்ட பணிப்பாளர்   உட்பட  கல்முனை பிரதேச செயலக பிரிவில்  சமுர்த்தி  உத்தியோகத் தர்களாக கடமையாற்றி  சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற  உத்தியோகத்தர்கழும், பொது முகாமைத்துவ உதவியாளராக  கடமையாற்றி  இடம்மாறி ச் சென்றவர்களும்   கெள ரவிக்கப் பட்டதுடன்,  கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றன. கல்முனை பிரதேச  திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில்  இடம்பெற்ற இன்நிகழ்வுகளில்  திவிநெகும மாவட்ட பணிப்பாளர் அனுரத்த பியதாஸ,  கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி,  திவிநெகும  பிரதி ப்  பணிப்பாளர் ஐ.அலியார்   உட்பட  கல...

கல்முனை நகர அபிவிருத்தியில் மோசடியும் பண விரயமும் பற்றி இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர் -  அப்துல் அஸீஸ்) கல்முனை நகர அபிவிருத்தியில் மோசடியும்,பண விரயமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இது தொடர்பில் பூரண விசாரணை நடாத்துமாறு தேசிய ஜனநாய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நேற்று (25-02-2015)முறைப்பாடு செய்துள்ளார்.  அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாவது :- நமது தாய்  நாட்டில் ஊழலற்ற, நீதியான மற்றும் மக்கள் நலன் பேணும் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது எமது நாட்டு மக்கள் ஒன்றுபட்டு ஒரு ஆட்சியை ஏற்படுத்தியுள்ளனர் . இந்த ஆட்சியில் மிகவும் நம்பிக்கைக்குரியதும் மனித உரிமைக்கான பாதுகாப்பாகவும் மக்கள் நமது நாட்டு நீதிமன்றங்களையும் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு  செய்வதற்கான ஆணைக்குழுவின் மீதுமே பூரண நம்பிக்கை வைத்துள்ளனர் . அந்த வகையில் நானும் சில விடயங்கள் தொடர்பில் தங்களுக்கு ஒரு முறைப்பாட்டை வழங்குவதன் மூலம் எமது மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியாக நம்பகின்றேன்.  அந்த வகையில்  01. கல்முனை மாநகர பி...

கல்முனை இராசையா ஸ்ரீவேல்ராஜா தமிழ்இசிங்கள மொழி பெயர்ப்பாளராக சத்திய பிரமாணம்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) கல்முனை வட்டவிதானை வீதியைச் சேர்ந்த இராசையா ஸ்ரீவேல்ராஜா நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட தமிழ்இசிங்கள மொழி பெயர்ப்பாளர் போட்டிப்பரிட்சையில் சித்தி பெற்று தமிழ்இசிங்கள மொழி பெயர்ப்பாளராக கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.எச்.முகைதீன் முன்னிலையில் அண்மையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.  இவர் வாழசை;சேனை,மற்றும்;  மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியலயங்களின் பழைய மாணவராவார். சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் தமிழ்,சிங்கள ஊடகங்களில் கல்முனை  பிராந்திய ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். மேலும் மக்கள் வங்கியில் உதவி பாதுகாப்பு அத்தியட்சகராகவும் தொழில் புரிகின்றார்.கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் சிரேஷ்ட அங்கத்தவராகவும் செயற்படும் இவர் கல்முனை தொகுதி இந்து  மாமன்ற செயலாளராகவும்,பல அமைப்புக்களில் அங்கத்தவராகவும் இணைந்து சமூக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் நியமனம்

Image
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் சதோச  நிறுவனத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளராக  நட்பிட்டிமுனையை சேர்ந்த  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  பிரதி அமைப்பாளரும்  கட்சியின் உயர் பீட உறுப்பினருமான  கரீம் முஹம்மத் முபீத்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான  றிசாத்  பதியுதீன் அவர்களால் நியமிக்கப் பட்டுள்ளார் . இவருக்கான நியமனக் கடிதம் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சில் வைத்து அமைச்சரினால் வழங்கி வைக்கப் பட்டது .  இந்நிகழ்வில்  கல்முனை தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர்   காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம். ஹலீமும்  கலந்து கொண்டார். 

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் என்பது அரசியல் வியாபாரிகளின் சூழ்ச்சி என்கிறார்

Image
ஏ.எம்.பறகத்துல்லாஹ் முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைவருக்கும் எதிராக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் நாளை (26) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட போராளிகள் என்ற பெயரில் அனாமேதய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதில் எந்தவித உண்மையும் இல்லை இதனை கட்சிப் போராளிகளும் பொதுமக்களும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை இது ஒரு சில அரசியல் வியாபாரிகளின் செயல் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.பறகத்துல்லாஹ் தெரிவித்தார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,  ஆள் அடையாளத்தை வெளிப்படுத்தாத கோளைத்தனமான சில விஷமிகள் கட்சித் தலைமைக்கு எதிராக நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரி அம்பாறை மாவட்ட மக்களை கட்சிக்கு எதிராக திசை திருப்ப முற்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்களை இச்சதிகாரர்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களிக்க முயற்சிப்பதற்கான முதல் நாடகமே இக்ஹர்த்தால் நாடமாகும்.  உண்மையில் இது மக்களை பிழையாக வழி நடாத்தி அதன் மூலம் அரசியல் வளர்ச்சி காண நப்பாசைப்படும் அரசியல்...

மருதமுனை மர்ஹூம் பளீல் மௌலானா இவ்வுலகை விட்டு பிரிந்து இன்று இரண்டு ஆண்டுகள்

Image
பி.எம்.எம்.எ.காதர்) மருதமுனையின் மூத்த கல்வியலாளர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மர்ஹூம் ஐ.எம்.எஸ்எம்.அபுல்கலாம் பளீல் மௌலானா அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து இன்று 2015-02-25ம் திகதி இரண்டு வருடங்கள் கடந்த விட்டன.  இவர் மறைந்தாலும் இவரின் சேவைகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர் இன்று நம்மத்தியில் இல்லாவிட்டாலும் அவர்களின் நல்லறங்கள்,நற்பண்புகள்,சமூக சேவைகள் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்மை குறிப்பிடத்தக்கது. கல்வி அதிகாரியாக இருந்து பதவியை அலங்கரிக்காமல் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அரப்பணித்தவர். நிமிர்ந்த நடை, கம்பீரத் தோற்றம்,முகம்மது அலி ஜின்னா, நேரு ஆகியோர் அணியும் தொப்பியுடன் கூடிய தோற்றம் இன்னும் கண்முன்னே காட்சியளிக்கின்றது. எடுத்த காரியத்தை துரிதமாகவும்,திறம்படவும் செய்து முடிக்கின்ற ஆற்றலை கொண்டவர். மருதமுனை மண்ணில் ஆண்மீகப் பணிபுரிந்த அக்காலத்தில் கொழும்பு மாநகரில் பெயர் பெற்ற மர்ஹூம் ஐதுரூஸ் மௌலானா- ஆயிஷா தம்பதியின் புதல்வர்களில் ஒருவராக 1920.12.31ம் திகதி மருதமுனையில் பிறந்தவர்தான் மர்ஹூம் ஐ.எம்.எஸ்எம்.பளீல் மௌலானா அவர்கள். இ...

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு அதிகாரிகளின் உறுதி மொழியால் ஒத்திவைப்பு

Image
(எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது நூலக வீதி அல்-அமீன் சந்தியில் பொது மக்களால் கொட்டப்படும் கழிவுக் குப்பைகளால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வீதியில் வசிக்கும் பிரதேச வாசிகள், பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள்; விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இவ்விடத்தில் கழிவுக் குப்பைகளை கொட்டாமல் தடை செய்யக்கோரி பிரதேசவாசிகள், மாணவர்களால் கல்முனை மாநகர சபைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கு இன்று (24) செவ்வாய்க்கிழமை முற்பட்ட வேளை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். கல்முனை மாநகர சபை, கல்முனை பொலிஸ் நிலையம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு மேற்படிவிடயம்  கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே இப்போராட்டம் முன்னெடு ப்பதற்கான முஸ்தீபுகளை பிரதேச மக்கள் மேற்கொண்டனர். இவ்வீதியில் அரச காரியாலயங்கள், அரச உயர் கல்வி நிலை...

வடக்கு கிழக்கு மாநிலம் என்ற கோட்பாட்டிலேதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணித்து வருகிறது.

Image
இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசனலி இஸ்ஹாக்  வடக்கு கிழக்கு மாநிலம் என்பது தமிழ் பேசும் தாயகம், தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்ற கோட்பாட்டிலேதான் எங்களுடைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பயணித்து வருகிறது. அதே கோட்பாட்டில்தான் தமிழ் மக்களும் இருக்கின்றார்கள். எனவே நாங்கள் இனிமேலும் இனரீதியாக பிரிந்து வாழ முடியாது. இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசனலி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று (24) விஜயம் செய்த போது அங்கு தெரிவித்தார்.  வைத்திய சாலைக்கு சென்ற அமைச்சருக்கு  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்த விஜயத்தின்போது சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ள் வீரசிங்க, பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் உட்பட சுகாதார அமைச்சு உயரதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். இராஜாங்க அமைச்சர் ஹஸனலி அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது…. இன ரீதியாக பிரிந்திருக்க முடியாதென்ற சித்தார்ந்தத்தைக் கொண்டுள்ள இந்தப் பிரதேசத்தில் எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் இரண்டு சமூகங்களும்...

கல்முனையை பற்றி புத்திஜீவிகள் சந்தித்து பேசினர்! புதிய மாற்றத்துக்கான நிர்மாணமும் நகர்வும்!!

Image
“புதியமாற்றத்துக்கானநிர்மாணமும் நகர்வும்” என்ற தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்தினை சேர்ந்த சுமார் நூறுக்கு மேற்பட்ட புத்திஜீவிகள் சந்திப்பொன்று பெப்ரவரி 22 , 2014 ஆம் திகதி கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலீலுர் ரஹ்மான் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறுதுறைசார் புத்திஜீவிகளான, கல்வியலாளர்கள், தனவந்தர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள் என்று பலரும் கலந்து கொண்டு மிகக் காத்திரமான கருத்துப் பரிமாற்றல்களையும், தீர்மானம்களையும், மேற்கொண்டனர். மறைந்த தலைவர் எம். எச். எம் அஷ்ரப் அவர்களுக்கு பிந்திய கடந்த 15 வாருடம்களாக அபிவிருத்தி என்றாலும்சரி சமூக அரசியல் தலைமைத்துவம்என்றாலும்சரிமிக நீண்ட வெற்றிடம் காணப்படுவதாக மக்கள் அங்கலாய்ப்பது அனைவரும் அறிவோம். இந்நிலையினை போக்குவதற்காக கல்முனையில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் வாழும் அக்கறையுள்ள புத்திஜீவிகள் ஒன்றுபட்டு முஸ்லிம்களின் தலைநகரை, தலைநகரின் அந்தஸ்துக்கு நிலைப்படுத்த அரசியல்,கல்வி, பொருளாதாரம், மீன்பிடி, விவசாயம், ஒழுக்கவிழுமியங்கள்போன்ற இன்னோரன்ன துறைகளை அவசரமாக அபிவிர...

முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சர் வருவதைப் போல் நாங்கள் நூறு நாள் அமைச்சர்கள்தான்

Image
சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி  (பி.எம்.எம்.எ.காதர்) புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில்  எந்தக் கெடுபிடிகளும் இல்லாமல் எல்லா அமைச்சுக்களும்,அமைச்சர்களும் சுதந்திரமாக  இயங்குகின்ற நிலை உருவாகியிருக்கின்றது என சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார். மருதமுனை பிரதேச வைத்திய சாலைக்கு இன்று  (23-02-2015)வருகை தந்த ராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றம் வைத்தியசாலை டாக்டர்கள்,உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி போல் வீரசிங்க,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் வைத்தியசாலையின் அபிவிருத்திசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  இங்கு சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி மேலும் உரையாற்றுகையில் த...

சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹசனலி சாய்ந்தமருது வைத்தியசாலை, கல்முனை சுகாதார பணிமனைக்கு விஜயம்!

Image
சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் என்பவற்றுக்கு விஜயம் செய்தார். சாய்ந்தமருது வைத்தியசாலை நிகழ்வு அதன் பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் அடங்கிய மகஜர் ஒன்று வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரினால் சுகாதார ராஜாங்க அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வைத்தியசாலை நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்கும் விஜயம் செய்தார். இதன்போது கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் உள்ளிட்ட அதிகாரிகளினால் அவர் வரவேற்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி, நினைவுச் ச...

கல்முனையில் காணப்பட்ட கிராம சேவகர் வெற்றிடம் நிரப்பப் பட்டுள்ளது

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர் கல்முனை ப்பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான வெற்றிடங்களுக்காக புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்முனைக்குடி பிரதேசத்தில் நீண்ட காலமாக 7 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. இவற்றில் பதில் கிராம உத்தியோகத்தர்களே கடமையாற்றி வந்தனர். அண்மையில் நடை பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு பயிலுநர்களாக சில காலம் கடமையாற்றி வந்த இவர்கள்  தற்போது குறித்த பிரிவுகளுக்கு  நிரந்த தரமாக  நியமிக்கப்ட்டுள்ளனர். இதன் பிரகாரம் கல்முனைக்குடி 2ஆம் பிரிவுக்கு எம்.ஏ.சி.நபீலா 6ஆம் பிரிவுக்கு யு.எல்.பாதிமா ரோஸ்னா 8ஆம் பிரிவுக்கு ஏ.ஆர்.ஷாமிலா 9 ஆம் பிரிவுக்கு ஏ.ஆர்.பாதிமா முஜாஹிதா 10ஆம் பிரிவுக்கு ஏ.ஆர் பாதிமா சனா 13ஆம் பிரிவுக்கு எஸ்.எம்.ஆஸாத் 14ஆம் பிரிவுக்கு ஏ.எம்.கியாஸ் ஆகியோர்  புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவுகளில் வாழும் பொது மக்கள் இனி  தத்தமது  பிரிவுளிலுள்ள  கிராம உத்தியாகத்தர்கள் பிரிவிலுள்ள   கிராம உத்தியோகத்தர்...

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்கஅமைச்சர் ஹசனலி நாளை விஜயம்

Image
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.ரீ.ஹசன் அலி நாளை 23.02.2015ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபைச் செயலாhளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்தார்.  புதிய அரசாங்கத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி நியமிக்கப்பட்டதன் பின்னர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு முதற்தடவையாக விஜயம் செய்யவுள்ள அமைச்சருக்கு வரவேற்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.  இதன்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வைத்தியசாலையினை தரமுயர்த்தல் தொடர்பாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.  சுகாதார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப...

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் ஏழாம் கட்டம்

Image
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் ஏழாம் கட்டத்தினூடாக பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை (21) மாலை மாகாண சபை உறுப்பினரின் கல்முனை அலுவலகத்தில் நடை பெற்றது  தேர்தல்  காலங்களில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாகுக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘வாழ்வின் ஒளி’ வாழ்வாதார உதவிகள் வழங்கும்  செயற்றிட்டத்தின் கீழ் பிரதேச ரீதியாக மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் கண்டறியப்பட்டுஇ அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ் ‘வாழ்வின் ஒளி’ செயற்றிட்டத்தின் ஏழாம் கட்ட வைபம்  சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின்(சிடா-ஸ்ரீலங்கா) அனுசரணையூடன்  “ஒருமைப்பாட்டினூடான அபிவிருத்தியின் மூலம் சமூகத்தின் வளமான வாழ்வூக்கு வலுவூட்டுவோம்” எனும் கருப்பொருளில் நடை பெற்றது. இதன்போது பயனாளிகளுக்கு இலவச குடி நீர் இணைப்பு மற்றும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இ பாதணிகள்  என்பன வழங்கி வைக்கப் பட்டன  கிழக்கு மாகாண சப...

கல்முனையில் ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயம் திறந்து வைப்பு

Image
யு.எம்.இஸ்ஹாக்  அம்பாறை கல்முனைக்குடி ஐக்கிய தேசியக் கட்சி மத்திய  குழு தலைமைக் காரியாலயம்  சற்று முன்னர் கல்முனை கடற்கரைப் பள்ளி  வீதியில் திறந்து வைக்கப்  பட்டது.  ஐக்கிய தேசியக் கட்சி கல்முனைக்குடி அமைப்பாளர்  எஸ்.எல்.எஸ்.முஹீஸ் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே , கிழக்கு மாகாண  சபை உறுப்பினரும்  ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான தயா கமகே  ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மக்கள் சந்திப்பும் இடம் பெற்றது . இதில் பெருந்தொகையான பெண்கள் கலந்து கொண்டனர் .

கல்முனை மாநகர் அருள்மிகு ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ கொடியேற்ற விழா சனிக்கிழமை ஆலய பிரதம குரு சிவா ஸ்ரீ கந்த வரதேஸ் வரக் குருக்கள் தலைமையில் பெற்றது

Image
 .