கல்முனையில் காணப்பட்ட கிராம சேவகர் வெற்றிடம் நிரப்பப் பட்டுள்ளது

ஏ.பி.எம்.அஸ்ஹர்
கல்முனை ப்பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான வெற்றிடங்களுக்காக புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனைக்குடி பிரதேசத்தில் நீண்ட காலமாக 7 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. இவற்றில் பதில் கிராம உத்தியோகத்தர்களே கடமையாற்றி வந்தனர்.
அண்மையில் நடை பெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு பயிலுநர்களாக சில காலம் கடமையாற்றி வந்த இவர்கள்  தற்போது குறித்த பிரிவுகளுக்கு  நிரந்த தரமாக  நியமிக்கப்ட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் கல்முனைக்குடி 2ஆம் பிரிவுக்கு எம்.ஏ.சி.நபீலா 6ஆம் பிரிவுக்கு யு.எல்.பாதிமா ரோஸ்னா 8ஆம் பிரிவுக்கு ஏ.ஆர்.ஷாமிலா 9 ஆம் பிரிவுக்கு ஏ.ஆர்.பாதிமா முஜாஹிதா 10ஆம் பிரிவுக்கு ஏ.ஆர் பாதிமா சனா
13ஆம் பிரிவுக்கு எஸ்.எம்.ஆஸாத் 14ஆம் பிரிவுக்கு ஏ.எம்.கியாஸ் ஆகியோர்  புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரிவுகளில் வாழும் பொது மக்கள் இனி  தத்தமது  பிரிவுளிலுள்ள  கிராம உத்தியாகத்தர்கள் பிரிவிலுள்ள   கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்களுக்குச் சென்று தமது தேவைகளைப்புர்த்தி செய்து கொள்ள முடியும் என கல்முனைப் பிரதேச செயலகத்தின்  கிராம உத்தியாகத்தர்களின்   நிருவாக உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.லாஹிர் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்