முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சர் வருவதைப் போல் நாங்கள் நூறு நாள் அமைச்சர்கள்தான்


சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி 
(பி.எம்.எம்.எ.காதர்)
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில்  எந்தக் கெடுபிடிகளும் இல்லாமல் எல்லா அமைச்சுக்களும்,அமைச்சர்களும் சுதந்திரமாக  இயங்குகின்ற நிலை உருவாகியிருக்கின்றது என சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார்.
மருதமுனை பிரதேச வைத்திய சாலைக்கு இன்று  (23-02-2015)வருகை தந்த ராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் மற்றம் வைத்தியசாலை டாக்டர்கள்,உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி போல் வீரசிங்க,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம்,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் வைத்தியசாலையின் அபிவிருத்திசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
இங்கு சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு முறைதான் ஜனாதிபதியாக இருப்பார் இரண்டாவது முறை அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.
அதனால் அவரிடம் அவருக்கான  எதிர்கால அஜந்தா எதுவும் இல்லை அதனால் மக்களுக்கான நல்லாட்சியைக் கொண்டு வருகின்ற பணியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். நூறு நாள் வேலைத்திட்டத்திலே தேசிய மட்டத்தில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான அஜந்தா ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
அதன் மூலம் யாப்பு மாற்றம்,சுயாதீன ஆணைக்குழுவை இன்னும் பலமான அதிகாரத்துடன் நியமித்தல்,பழைய தேர்தல் தொகுதித்திட்டம் கொண்டுவரப்பட இருக்கின்றது இதில் 70 விகிதம் நேரடியாக தொகுதிகளில் இருந்தும்  30விகிதம் விகிதாசார தேர்தல் முறையையும் உட்புகுத்தி ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள்.
மேலும் அரசியல் வாதிகள் கட்சி மாறுகின்ற போது அவர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கும் வகையிலான சட்டமும் கொண்டுவரப்பட இருக்கின்றது. அப்படியான சூழலில் நானும் இன்னும் இரண்டு மாதத்திற்குத்தான் அமைச்ராக இருக்கலாம்.
முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சர் வருவதைப் போல் நாங்கள் நூறு நாள் அமைச்சர்கள்தான் இதற்குள் நாங்கள் எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என ராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.மிஹ்ளார்இவைத்திய சாலையின் அபிவிருத்தி சபையின் செயலாளர் ஏ.ஆர்.ஏ.சத்தார்இகல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் ஆகியோர் வைத்தியசாலையின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூறினார்கள். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்